முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயங்கரவாதியின் பெயரை ஒரு போதும் உச்சரிக்க மாட்டேன் - நியூஸி. பிரதமர்

செவ்வாய்க்கிழமை, 19 மார்ச் 2019      உலகம்
Image Unavailable

கிறிஸ்ட்சர்ச் : மசூதிகளில் பயங்கரவாத தாக்குதலை நடத்திய பயங்கரவாதியின் பெயரை உச்சரிக்க மாட்டேன் என நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா கூறியுள்ளார்.

நியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள 2 மசூதிகளில் தொழுகை நடந்து கொண்டிருந்த போது மர்ம நபர்கள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 49 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசிப்பதற்காக பிரதமர் ஜெசிந்தா தலைமையில் சிறப்பு பாராளுமன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் துவக்கத்திலேயே, அரபு மொழியில் வணக்கம் கூறி விட்டு ஜெசிந்தா பேச துவங்கினார். இதில் அவர் பேசியதாவது:-

பயங்கரவாத நடவடிக்கையால் பல உயிர்களை பலி வாங்கி உள்ளான். அதனால் அவனது பெயரை கேட்கக் கூட விரும்பவில்லை. இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக எம்பிக்கள் பணியாற்றுவார்கள். சட்டம் முழு வீச்சில் அவன் மீது பாயும்.  அவன் ஒரு பயங்கரவாதி, குற்றவாளி. ஒரு போதும் அவனது பெயரை நான் உச்சரிக்க மாட்டேன். நீங்களும் அவனது பெயரை உச்சரிப்பதை விடுத்து, அவனால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து பேசுங்கள் என அனைவரிடத்திலும் வேண்டுகோள் விடுக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து