முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் பா.ம.க வேட்பாளர் மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசன் உறுதி

செவ்வாய்க்கிழமை, 19 மார்ச் 2019      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல்,- நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஜோதி முத்து மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியை பெறுவார் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல்  சி.சீனிவாசன் பேசினார்.
நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சியான பாமக போட்டியிடுகிறது. அக் கட்சியின் வேட்பாளராக ஜோதி முத்து நிறுத்தப்பட்டுள்ளார். அவர் திண்டுக்கல் மாவட்ட அதிமுக கட்சி அலுவலகத்துக்கு வருகை தந்து வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை பெற்றார். மேலும் மாவட்ட கழக செயலாளரும், மாநகராட்சி முதல் மேயருமான வி .மருதராஜ், மாவட்ட பொருளாளர் உதயகுமார் எம்பி, வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வி பி பி பரமசிவம், மாநில அம்மா பேரவை இணை செயலாளர் ஆர். வி.என். கண்ணன், ஆகியோருக்கும் வேட்பாளர் ஜோதி முத்து பொன்னாடை அணிவித்தார்.
இதனையடுத்து வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் சிறப்புரையாற்றுகையில்,
நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக மெகா கூட்டணி அமைத்துள்ளது. இக்கூட்டணியில் பா.ம.க, பா.ஜ.க, தே.மு.தி.க, த.மா.க, புதிய தமிழகம், உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் உள்ளன. திண்டுக்கல் தொகுதியில் கடந்த முறை அதிமுக தனித்து நின்று போட்டியிட்டு ஒரு லட்சத்து 38 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் உதயகுமார் வெற்றி பெற்றார், தற்போது கூட்டணி கட்சிகளின் பலமும் உள்ளது. எனவே, நமது கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக வேட்பாளர் ஜோதி முத்து 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியை பெறுவார்.திண்டுக்கல் தொகுதி மட்டுமல்ல 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணியே மகத்தான வெற்றியைப் பெறும். மீண்டும் இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்பார். அவர் பிரதமராவதை எந்த கொம்பனாலும் ஆட்டவோ, அசைக்கவோ, தடுக்கவோ முடியாது. நமது கூட்டணி கட்சி வேட்பாளர் ஜோதி முத்து வெற்றிக்காக தொண்டர்கள் ஓய்வின்றி உழைத்து மகத்தான வெற்றியை பெற்றிட வேண்டும். என்று பேசினார்.
நிகழ்ச்சியில் ஆவின் சேர்மன் ஏ டி செல்லச்சாமி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் திவான் பாட்ஷா, முன்னாள் அபிராமி கூட்டுறவு சங்க தலைவர் பாரதி முருகன், மாவட்ட பேரவை செயலாளர் வி. டி .ராஜன், இளைஞரணி செயலாளர் சரவணன், தொழிற்சங்க செயலாளர் ஜெயராமன், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஜெயபால், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தென்னம்பட்டி பழனிச்சாமி, வேணுகோபால், பிரேம்குமார், திண்டுக்கல் ஒன்றிய கழக செயலாளர் ஜெயசீலன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய கழக செயலாளர் ராஜ்மோகன், ஒட்டன்சத்திரம் ஒன்றிய கழக செயலாளர் பி பாலசுப்பிரமணி, கொடைக்கானல் நகர செயலாளர் எம். ஸ்ரீதர், வத்தலகுண்டு நகர செயலாளர் பீர் முகமது, முன்னாள் மாமன்ற உறுப்பினர் நாகூர் கனி, ஆத்தூர் ஒன்றிய கழக செயலாளர் பி .கே. டி. நடராஜன், அகரம் பேரூர் கழக செயலாளர் சக்திவேல், மற்றும் பாமக, பாஜக ,தேமுதிக ,தமாக,புரட்சி பாரதம், புதிய தமிழகம் ,ஆகிய கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும் தொண்டர்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து