முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடன்கள் தள்ளுபடி- தி.மு.க. அறிக்கையில் திருத்தம்

புதன்கிழமை, 20 மார்ச் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஆட்சிக்கு வந்தால் அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 
 
பாராளுமன்றத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை  வெளியிடப்பட்டது. கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசினார். அப்போது, வேளாண்துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை, சிறு குறு விவசாயிகளின் பயிர்க்கடன்கள் தள்ளுபடி, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு, கல்விக்கடன் தள்ளுபடி நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

5 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்திருப்பவர்கள் சிறு குறு விவசாயிகள் என வரையறுக்கப்பட்டிருக்கிறது. எனவே, தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை அனைத்து விவசாயிகளையும் திருப்தி செய்யும் வகையில் இருக்காது என்பதால், தேர்தல் அறிக்கையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “திமுக தேர்தல் அறிக்கையில் சிறு குறு விவசாயிகளின் அனைத்து வகையான பயிர்க்கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று வெளியிடப்பட்டு இருந்தது.

தற்போது விவசாயிகளின் கோரிக்கை மற்றும் கூட்டணி கட்சிகளின் வேண்டுகோளை ஏற்று, அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என தேர்தல் அறிக்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது” என கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து