முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடி உண்மையிலேயே காலேஜ் போயிருக்காரா?: ராகுல்

புதன்கிழமை, 20 மார்ச் 2019      இந்தியா
Image Unavailable

இம்பால் : பிரதமர் மோடி காலேஜ் போயிருக்கிறாரா? அவரது பட்டப்படிப்பு சான்றிதழை யாராவது பார்த்ததுண்டா? என காங்கிரஸ் தலைவர் ராகுல் கேள்வி எழுப்பி உள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல், இம்பாலில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது, உங்களின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றை காங்கிரஸ் பாதுகாக்கும் என உறுதி அளிக்கிறேன். குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்ற நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று பேசினார்.

தொடர்ந்து மாணவர்களிடையே கலந்துரையாடிய ராகுல், பிரதமர் மோடி குறுக்கு வழியில் ரிசர்வ் வங்கியை கட்டுப்படுத்தி, பண மதிப்பிழப்பை கொண்டு வந்துள்ளார். விளம்பரத்திற்காகவே அவர் அனைத்து முடிவுகளையும் எடுக்கிறார். பிரதமர் அலுவலகமாக இல்லாமல் பிரபலப்படுத்தும் அமைச்சரின் அலுவலகமாக உள்ளது. பிரதமரின் பல்கலைக் கழக சான்றிதழை இதுவரை எங்களால் பெற முடியவில்லை. பிரதமர் உண்மையிலேயே காலேஜ் அல்லது பல்கலைக் கழகத்திற்கு போய் உள்ளாரா என யாருக்கும் தெரியாது. டெல்லியில் ஆர்.டி.ஐ. மூலம் பிரதமரின் பல்கலைக் கழக சான்றிதழ் பற்றி கேட்டதற்கு அவர்கள் பதிலளிக்கவில்லை என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து