முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாரிசு அரசியலையே காங்கிரஸ் முன்னிலைப்படுத்துகிறது: பிரதமர்

புதன்கிழமை, 20 மார்ச் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : காங்கிரசில் ஜனநாயகம் கிடையாது. காங்கிரஸ் ஓட்டு வங்கி அரசியலையும், வாரிசு அரசியலையும் முன்னிலைப்படுத்துகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மோடி தனது புதிய வலைதள பக்கத்தில் எழுதி உள்ள கட்டுரையில் காங்கிரஸ் மற்றும் ராகுல் குடும்பத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். அந்த கட்டுரையில் அவர், 2014-ல் வாரிசு அரசியலுக்கு எதிராக நேர்மை, வளர்ச்சி, பாதுகாப்பு, ஓட்டு வங்கி அரசியலுக்கு மாற்றாக மக்கள் ஓட்டளித்தனர். அதன் விளவைாக இந்திய வரலாற்றில் முதல் முறையாக 2014-ல் வாரிசு அரசியல் இல்லாத கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. ஒரு குடும்பத்தை முன்னிலைபடுத்தியதற்கு பதில் இந்தியாவை முன்னிலைப்படுத்தி அரசு பணிகள் நடந்தது. கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் அனைத்து அரசு இயந்திரங்களும் சிதைக்கப்பட்டது. பாதுகாப்பு துறையை வருமானம் ஈட்டும் துறையாக மட்டுமே காங்கிரஸ் பார்த்து வந்தது. ஒவ்வொரு இடைத்தரகருக்கும் ஒரு குடும்பத்துடன் தொடர்பு உள்ளது. நாங்கள் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியதைக் கூட காங்கிரஸ் கேள்வி கேட்கிறது. காங்கிரசின் ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லை. காங்கிரஸ் கட்சியின் தலைமையே பெரிய ஊழல் வழக்கில் ஜாமினில் உள்ளது. அவர்களை பொருத்தவரை காங்கிரஸ் மட்டும் தான் சரி. மற்ற அனைவரும் தவறானவர்கள். இவ்வாறு பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து