முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தலில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கழக வேட்பாளர் அமோக வெற்றி அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் உறுதி

புதன்கிழமை, 20 மார்ச் 2019      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல் - நடைபெற உள்ள நிலக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தலில் கழக வேட்பாளர் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறுவார் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல்  சி.சீனிவாசன் உறுதிபட பேசினார்.
திண்டுக்கல் தொகுதி பாராளுமன்ற வேட்பாளர்,நிலக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தல் கழக வேட்பாளர் ,அறிமுக கூட்டம் நிலக்கோட்டையில் மாவட்ட கழக செயலாளர் மருதராஜ் தலைமையில் நடைபெற்றது. நிலக்கோட்டை ஒன்றிய கழக செயலாளர் யாகப்பன், வத்தலகுண்டு ஒன்றிய கழக செயலாளர் பாண்டியன், வத்தலகுண்டு நகர செயலாளர் பீர்முகமது ஆகியோர் வரவேற்றனர். நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் உதயகுமார் எம்பி, மாநில பேரவை இணைச் செயலாளர் ஆர். வி .என். கண்ணன் மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள் பேசினர்.
கூட்டத்தில் பாராளுமன்ற தொகுதிக்கு போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளர் ஜோதி முத்து, நிலக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தல் கழக வேட்பாளர் தேன்மொழி சேகர் ஆகியோரை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அறிமுகம் செய்து வைத்து சிறப்புரையாற்றுகையில்
நடைபெறுகின்ற கூட்டம் வேட்பாளர் அறிமுக கூட்டமா, அல்லது வெற்றிவிழா கூட்டமா என்று கூறுமளவிற்கு திரளான பொதுமக்களும் கழக நிர்வாகிகளும் கூடிள்ளனர்.நிலக்கோட்டை இடைத்தேர்தல் துரோகத்திற்கும் நன்மைக்கும் இடையே நடைபெறுகின்ற தேர்தல் ஆகும். ஏற்கனவே கழகத்தின் சார்பில் வெற்றி பெற்ற தங்கத்துரை தினகரன் பின்னால் சென்றதால் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் துரோகி தினகரனுக்கும் தங்க துரைக்கும் தொகுதி மக்கள் பாடம் கற்பிக்க வேண்டும்.
இதேபோன்று 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினராக உதயகுமார் ஐந்து ஆண்டுகள் சிறப்பாக பணிபுரிந்துள்ளார். திண்டுக்கல் தொகுதிக்காக ஏராளமான திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.அதே போன்று நமது கூட்டணி கட்சியான பாமக வேட்பாளர் ஜோதி முத்துவும் சிறப்பாக பணியாற்றுவார். மேலும் நிலக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தலில் கழக வேட்பாளராக தேன்மொழி சேகர் நிறுத்தப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக பணிபுரிந்து மக்களின் பேராதரவை பெற்றவர். கடந்த பாராளுமன்ற தேர்தலில் கழகம் தனித்து நின்று போட்டியிட்டு ஒரு லட்சத்து 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது பாமக ,பாஜக, தேமுதிக ,தமாகா ,புரட்சி பாரதம், புதிய தமிழகம், உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள் கழகத்தோடு கூட்டணி அமைத்துள்ளன.எனவே கழக கூட்டணி வேட்பாளர் ஜோதி முத்து 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். அதேபோன்று சட்டமன்ற இடைத்தேர்தலில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தேன்மொழி சேகர் வெற்றி பெறுவார். 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் 18 சட்டமன்ற இடைத் தேர்தலிலும் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்.
திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் செய்யமுடியாத, நிறைவேற்ற முடியாத திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றி உள்ளனர். ஆனால் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் பல அற்புதமான உன்னதமான திட்டங்களை கழக ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் அறிவித்துள்ளனர்.அதில் குறிப்பாக வறுமைக்கோட்டிற்கு கீழே வாழக்கூடிய குடும்பத்திற்கு மாதம் ரூ 1500 வழங்கப்படும் என அறிவித்துள்ளனர். பாரதப் பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளுக்கு மூன்று கட்ட தவணையாக ரூ 6 ஆயிரம் வழங்கியுள்ளார். அதேபோன்று தமிழக முதல்வரும் துணை முதல்வரும் வறுமைக்கோட்டிற்கு கீழே விழக்கூடிய குடும்பத்திற்கு ரூ 2000 அறிவித்து செயல்படுத்தி உள்ளனர்.  நரேந்திர மோடி மீண்டும் பிரதமராகவும் கழக ஆட்சி தொடர்ந்து சிறப்பாக செயல்படுவதற்கும் தமிழக மக்கள் அதிமுக கூட்டணிக்கு வாக்களித்து ஆதரவளிக்க வேண்டும் என்று பேசினார் .
நிகழ்ச்சியில் நிலக்கோட்டை நகர செயலாளர் சேகர், மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து