முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.ம.மு.க.வில் இருந்து கலைராஜன் திடீர் நீக்கம்

புதன்கிழமை, 20 மார்ச் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : அ.ம.மு.கவில் இருந்து தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் வி.பி.கலைராஜனை நீக்கி அக்கட்சியின் துணை பொதுசெயலாளர் தினகரன் அதிரடியாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அ.ம.மு.க துணைப்பொதுசெயலாளர் தினகரன் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது.,

கட்சியின் கொள்கைக் குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கட்டுப்பாட்டை மீறி களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் வி.பி.கலைராஜன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

கட்சியினர் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனக்கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் சுகுமார் பாபு நியமிக்கப்படுகிறார். அவர் இதுவரை வகித்து வந்த அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து