முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துப்பாக்கிகள் விற்பனைக்கு கட்டுப்பாடு நியூசிலாந்து பிரதமர் நடவடிக்கை

வியாழக்கிழமை, 21 மார்ச் 2019      உலகம்
Image Unavailable

வெலிங்டன், நியூசிலாந்தில் துப்பாக்கிகள் விற்பனைக்கு கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வந்து அந்நாட்டு பிரதமர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

நியூசிலாந்தின் கிழக்கு கடலோர நகரமான கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள 2 மசூதிகளில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் பலியானார்கள். இது தொடர்பாக ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த பயங்கரவாதியான பிரெண்டன் டாரண்ட் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டான். அவன் மீது கொலை குற்றச்சாட்டு பதிவு செய்த நீதிபதி, அவனை அடுத்த மாதம் 5-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

நியூசிலாந்து சட்டப்படி ஒருவர் 16 வயதிலேயே சாதாரண துப்பாக்கியையும், 18 வயதில் பகுதியளவு தானியங்கி துப்பாக்கியையும் வாங்க முடியும். எனவே, நாட்டில் நடைமுறையில் இருக்கும் துப்பாக்கி சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து, துப்பாக்கி வாங்குவது மற்றும் வைத்திருப்பதற்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது.

இந்த நிலையில், நியூசிலாந்தில் துப்பாக்கி விற்பனைக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா நடவடிக்கை எடுத்துள்ளார். ராணுவ பாணியிலான பாதியளவு தானியங்கி துப்பாக்கி மற்றும் அசால்ட் ரைபிள்கள் விற்பனைக்கு உடனடியாக தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து