முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூலூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கனகராஜ் மாரடைப்பால் மரணம்

வியாழக்கிழமை, 21 மார்ச் 2019      தமிழகம்
Image Unavailable

கோவை : கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கனகராஜ் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

கோவை மாவட்டம் சூலூரில் உள்ள தனது வீட்டில் நேற்று காலை செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்த போது கனகராஜிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சிறிது நேரத்திலேயே, அவரது உயிர் பிரிந்தது. சூலூர் சுல்தான்பேட்டையை சேர்ந்த கனகராஜிற்கு மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கடந்த 30 ஆண்டுகளாக அரசியலில் இருந்து வந்த கனகராஜ், மாவட்ட ஊராட்சி தலைவராக இருந்துள்ளார். அதன் பிறகு கடந்த சட்டசபை தேர்தலின் போது அ.தி.மு.க. சார்பில் சூலூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. கனகராஜின் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டது. கனகராஜ் உடலுக்கு முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து