தே.மு.தி.க. துணை செயலாளர் சுதீஷ் வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

வியாழக்கிழமை, 21 மார்ச் 2019      தமிழகம்
Sudheesh 2019 03 21

சென்னை : தே.மு.தி.க. துணை செயலாளரும், பிரேமலதாவின் சகோதரருமான சுதீஷின் வீட்டுக்கு திடீரென போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுதீஷுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா. தே.மு.தி.க.வின் துணை செயலாளராக சுதீஷ் செயல்பட்டு வருகிறார். விஜயகாந்துக்கு பக்கபலமாக உடனிருந்த சுதீஷ் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில்  கட்சி நிர்வாகம் மற்றும் கேப்டன் டி.வி. பொறுப்புகளைக் கவனித்து வருகிறார்.

சமீபத்தில் கூட்டணிக் கட்சிகளுடனான பேச்சுவார்த்தையிலும் சுதீஷ் ஈடுபட்டு வந்தார். பிரேமலதா, சுதீஷ் இருவரும் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். கூட்டணிப் பேச்சுவார்த்தை முடிந்து தே.மு.தி.க .4 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதம சிகாமணியை எதிர்த்து கள்ளக்குறிச்சி தொகுதியில் சுதீஷ் போட்டியிடுகிறார். போட்டி கடுமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் சுதீஷின் வீட்டிற்கு திடீரென துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. சுதீஷ் விருகம்பாக்கம் காவல் நிலைய எல்லையில் உள்ள வெங்கடேஷ்வரா நகர், 2-வது குறுக்குத் தெருவில் வசிக்கிறார். நேற்று காலை 8 மணி முதல் அவரது வீட்டில் திடீரென 3 போலீஸார் அடங்கிய துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து