முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி. தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு - வாரணாசியில் நரேந்திரமோடி போட்டி

வியாழக்கிழமை, 21 மார்ச் 2019      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 184 வேட்பாளர்கள் பட்டியலை பா.ஜ.க. தலைமை வெளியிட்டது. வாரணாசி தொகுதியில் மீண்டும் மோடியும், ராகுலை எதிர்த்து ஸ்மிருதி இரானியும் களமிறங்குகின்றனர். தமிழகத்தில் தூத்துக்குடியில் தமிழிசையும், கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணனும் போட்டியிடுகின்றனர்.

மீண்டும் போட்டி...

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 184 பா.ஜ.க. வேட்பாளர்களின் பெயர்கள் கொண்ட முதல் பட்டியலை டெல்லியில் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா நேற்று இரவு வெளியிட்டார். பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி எம்.பி.யாக பதவி வகிக்கும் குஜராத் மாநிலத்தில் உள்ள காந்திநகர் தொகுதியில் தேசிய தலைவர் அமித் ஷா இந்த தேர்தலில் நிற்கிறார். மத்திய அமைச்சர் நிதின் கட்காரி நாக்பூர் தொகுதியிலும், ராஜ்நாத் சிங் லக்னோவிலும், வி.கே.சிங் காசியாபாத் தொகுதியிலும், நடிகை ஹேமா மாலினி மதுரா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி இந்த முறையும் அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிடுகிறார்.

கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அமேதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி 4 லட்சத்து 8 ஆயிரத்து 651 வாக்குகளை வாங்கி வெற்றியடைந்தார். பா.ஜ.க. வேட்பாளராக அவரை எதிர்த்து நின்ற ஸ்மிருதி இரானி ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார் என்பது நினைவிருக்கலாம்.

தமிழக வேட்பாளர்கள்...

இதேபோல் தமிழகத்தில் போட்டியிடும் ஐந்து தொகுதிகளுக்கான பா.ஜனதா வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி கன்னியாகுமரில் பொன் ராதாகிருஷ்ணன் மீண்டும் போட்டியிடுகிறார். தூத்துக்குடியில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழியை எதிர்த்து தமிழிசை போட்டியிடுகிறார். ராமநாதபுரத்தில் நயினார் நாகேந்திரனும், சிவகங்கையில் எச். ராஜாவும், கோவையில் சி.பி. ராதாகிருஷ்ணனும் போட்டியிடுகிறார்கள்.

பா.ஜ.க வேட்பாளர் பட்டியல்

1) வாரணாசி - நரேந்திர மோடி.
2) காந்திநகர் - அமித் ஷா.
3) நாக்பூர் - நிதின் கட்காரி.
4) லக்னோ- ராஜ்நாத் சிங்.
5) காசியாபாத் - வி.கே.சிங்.
6) மதுரா - ஹேமா மாலினி.
7) அமேதி - ஸ்மிருதி இரானி.

தமிழக பா.ஜ.க. வேட்பாளர்கள்

1) கன்னியாகுமரி - பொன் ராதாகிருஷ்ணன்.
2) தூத்துக்குடி - தமிழிசை.
3) ராமநாதபுரம் - நயினார் நாகேந்திரன்.
4) சிவகங்கை - எச். ராஜா.
5) கோவை - சி.பி.ராதாகிருஷ்ணன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து