முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏழைகளுக்கு 2000 ரூபாய் சிறப்பு நிதி வழங்கும் திட்டம் நிறுத்தி வைப்பு

வியாழக்கிழமை, 21 மார்ச் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : மக்களவை தேர்தலையொட்டி, வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 2,000 ரூபாய் சிறப்பு நிதியுதவி வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பொதுநல வழக்கு

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களை அடையாளம் காணும் வரை 2,000 ரூபாய் நிதியுதவி திட்டத்துக்கு தடை விதிக்க கோரி விழுப்புரத்தை சேர்ந்த கருணாநிதி என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பயனாளிகளை கண்டறிய சரியான நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளதாக கூறி ஏற்கனவே மனுவை தள்ளுபடி செய்திருந்தது.

தள்ளிவைப்பு...

இந்நிலையில், அரசாணையை திருத்தி அதிகாரிகள் வெளியிட்டுள்ளதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கருணாநிதி தரப்பில் புது மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இவ்வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது வரைவு அரசாணை என்றும், அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டதே இறுதி அரசாணை என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மக்களவை தேர்தல் காரணமாக, 2,000 ரூபாய் சிறப்பு நிதியுதவி வழங்குவதும், அதற்கான கணக்கெடுக்கும் பணியும் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை தேர்தலுக்கு பின்னர் தள்ளிவைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து