முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீட்டின் அடியில் இருந்த கொடிய விஷமுள்ள கட்டுவிரியன் பாம்புகள்

வெள்ளிக்கிழமை, 22 மார்ச் 2019      உலகம்
Image Unavailable

அல்பேனி, அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் ஒரு வீட்டின் அடியில் பல கொடிய விஷத்தன்மை வாய்ந்த கட்டுவிரியன் பாம்புகள் கண்டுபிடிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள அல்பேனி பகுதியில் ஒரு வீட்டின் உரிமையாளர் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென கேபிள் சேவை பாதிக்கப்படவே, தற்செயலாக வீட்டிற்கு அடியில் வந்து பார்த்துள்ளார். அடியில் சில பாம்புகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து உடனடியாக அப்பகுதியின் பாம்புகள் பிடிக்கும் குழுவினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

பாம்புகளை பிடிப்பவர்கள் சிலர் அந்த வீட்டிற்கு விரைந்தனர். தொடக்கத்தில் சில பாம்புகளை கண்ட அவர்கள், பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது 30-க்கும் மேற்பட்ட கொடிய விஷத்தன்மை வாய்ந்த விரியன் வகை பாம்புகள் இருப்பதை கண்டு திகைத்தனர். பின்னர் சாமர்த்தியமாக அனைத்து பாம்புகளையும் பிடித்துச் சென்றனர். இதனை ஒருவர் தன் கையில் இருந்த செல்போன் மூலம் வீடியோ எடுத்து பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 18 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோ, பதிவிடப்பட்ட சிறிது நேரத்திலேயே 3 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து