முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சரத்பவார், மாயாவதி போட்டியிடாதது பா.ஜ.க. கூட்டணி வெற்றிக்கு அடையாளம்: சிவசேனா நாளிதழ் தலையங்கத்தில் தகவல்

வெள்ளிக்கிழமை, 22 மார்ச் 2019      இந்தியா
Image Unavailable

மும்பை, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும் லோக்சபா தேர்தலில் போட்டியிட போவதில்லை என அறிவித்திருப்பது பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்கான அடையாளம் என சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னா வெளியிட்டுள்ள கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து சிவசேனாவின் சாம்னா நாளிதழில் வெளியான கட்டுரையில் கூறப்பட்டிருப்பதாவது,

சரத்பவாரும், மாயாவதியும் லோக்சபா தேர்தல் போட்டியில் இருந்து விலகி இருப்பதால் பா.ஜ.க. வெற்றி பெறுவதற்கான அடையாளம். இவர்களின் முடிவால் மோடி மீண்டும் பிரதமர் ஆவதற்கான பாதை தெளிவாகி உள்ளது. இவர்கள் பிரதமர் போட்டியில் இருந்து விலகி இருப்பதும் மிக முக்கியமானது. சரத் பவார், ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க முயற்சிக்கிறார். ஆனால் அவரால் தனது சொந்த குடும்பம் மற்றும் கட்சி உறுப்பினர்களை ஒன்றுபடுத்த முடியவில்லை.

உ.பி.யில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கூட்டணிக்கு கிடைக்கும் ஓட்டுக்களை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா தடுப்பார். அம்மாநிலத்தில் மாயாவதி மற்றும் காங்கிரசிற்கு இருக்கும் ஓட்டு வங்கி சமமானது என்பதே இதற்கு காரணம். தேசியவாத காங்கிரசை சேர்ந்த பல முக்கிய தலைவர்கள் பா.ஜ.க.வில் இணைந்துள்ளது சரத்பவாருக்கு பெரிய பின்னடைவு. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து