முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டுவிட்டரில் பிரபலமான முதல்வர்கள் பட்டியல்: முதலிடம் பிடித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்

வெள்ளிக்கிழமை, 22 மார்ச் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, டுவிட்டரில் பிரபலமான முதல்வர்களின் பட்டியலில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் முதலிடத்தில் உள்ளார்.

அரசியலிலும், சமூக வலைதளங்களிலும் துடிப்புடன் செயல்படும் 6 முதல்வர்கள் மற்றும் அவர்களை பின்தொடர்வோர் பற்றிய விபரங்களை டுவிட்டர் வெளியிட்டுள்ளது. அதில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல் இடத்திலும், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் 2-வது இடத்திலும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு 3-வது இடத்திலும் உள்ளனர்.

உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் 4-வது இடத்திலும், மகராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் 5-வது இடத்திலும், மேற்குவங்க முதல்வர் மம்தா 6-வது இடத்திலும் உள்ளனர். முன்னதாக அதிக பிரபலமான முதல்வர்கள் பட்டியலில் மறைந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் 2- வது இடத்தில் இருந்து வந்தார். இவரை 6.9 மில்லியன் பேர் பின்தொடர்ந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து