முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இணையத்தில் சொத்து விபரங்களை வெளியிட்ட சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள்

வெள்ளிக்கிழமை, 22 மார்ச் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, சுப்ரீம் கோர்ட்டில் தற்போது உள்ள 27 நீதிபதிகளில், தலைமை நீதிபதி உட்பட, ஏழு நீதிபதிகள் மட்டுமே, தங்கள் சொத்து விபரங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

நீதித்துறையின் செயல்பாடு ஒளிவு மறைவற்று இருக்க வேண்டும் என்பதற்காக, நீதிபதிகள், தங்கள் சொத்து விபரங்களை, தாங்களே முன் வந்து தெரிவிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் அறிவித்திருந்தது. சுப்ரீம் கோர்ட்டின் இணையதளத்தில், சொத்து விபரங்களை வெளியிட முடிவு செய்யப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டில் 27 நீதிபதிகள் உள்ளனர். இவர்களில், தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் உட்பட, ஏழு நீதிபதிகள் மட்டுமே, தங்கள் சொத்து விபரங்களை, இதுவரை வெளியிட்டுள்ளனர்.

தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய், கடந்த ஆண்டு ஜூனில், தன் சொத்து விபரங்களை வெளியிட்டுள்ளார். அதில், தன் தாய், தனக்கு அன்பளிப்பாக வழங்கிய, அசாம் மாநிலம், கவுகாத்தியில் உள்ள நிலத்தை விற்றதில், 65 லட்சம் ரூபாய் கிடைத்ததாக கூறியுள்ளார். மேலும், தனக்கும், தன் மனைவிக்கும், சொந்தமாக வாகனங்களும் இல்லை என்றும், கடனும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். நீதிபதிகள், பானுமதி, கன்வில்கர், அசோக் பூஷண், அருண் மிஸ்ரா, என்.வி.ரமணா, எஸ்.வி.பாப்டே ஆகியோரும், தங்கள் சொத்து விபரங்களை தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து