முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

"மக்கள் மன்னிக்க மாட்டார்கள்" என்ற ஹேஷ்டாக்குடன் மோடி புதிய பிரச்சாரம்

வெள்ளிக்கிழமை, 22 மார்ச் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, நான் உங்கள் காவலாளி என்ற வாசகத்தை டுவிட்டரில் டிரெண்டாக்கிய பிரதமர் மோடி நேற்று மக்கள் மன்னிக்க மாட்டார்கள் எனும் ஹேஷ்டாக்குடன் புதிய பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.
 
பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் டுவிட்டர் பக்கத்தில் தனது பெயருக்கு முன்புறம் காவலாளி என்று குறிப்பிடப்படும் சவுக்கிதார் என்ற இந்தி சொல்லை அடைமொழியாக பயன்படுத்தினார். அவரை தொடர்ந்து அனைத்து மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க மாநில முதல்வர்கள், அக்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலரும் அந்த சொல்லை அடைமொழியாக பயன்படுத்தினர். இதனால் அந்த வார்த்தை டுவிட்டரில் பிரபலம் ஆனது.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அமைப்பின் தலைவரான சாம் பிட்ரோடா, பாகிஸ்தான் தேசிய நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய போது, பாகிஸ்தானில் இருந்து 8 பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைந்து ஏதோ செய்து விட்டார்கள் என்பதற்காக நீங்கள் (இந்தியா) ஒட்டுமொத்த (பாகிஸ்தான்) நாட்டின்மீது எகிறிப்பாய முடியாது என கூறியதாக செய்திகள் வெளியாகின. சாம் பிட்ரோடாவின்  இந்த கருத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  பாகிஸ்தான் தேசிய நாள் விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதுடன் நமது நாட்டின் ராணுவ வீரர்களின் வீரத்தை ராகுலின் நெருங்கிய நண்பரும், நம்பிக்கைக்குரிய ஆலோசகருமான சாம் பிட்ரோடா அவமதித்துள்ளது மிகப்பெரிய வெட்கக்கேடு என மோடி குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்னும் ஹேஷ்டாக்கை தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று பதிவிட்டுள்ள மோடி, நமது படைகளை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து சிறுமைப்படுத்தி வருகின்றன. 130 கோடி இந்தியர்களும் இவர்களை மன்னிக்க மாட்டார்கள் என்பதை நாம் தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து