முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் பவன்கல்யாணுக்கு சொத்து மதிப்பு ரூ.52 கோடி

வெள்ளிக்கிழமை, 22 மார்ச் 2019      இந்தியா
Image Unavailable

விசாகப்பட்டினம், தெலுங்கு முன்னணி நடிகரும், ஜனசேனா கட்சி தலைவருமான நடிகர் பவன்கல்யாணுக்கு ரூ.52 கோடி சொத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடக்கிறது. தெலுங்கு முன்னணி நடிகர் பவன்கல்யாண் அங்கு ஜனசேனா என்ற கட்சியை நடத்தி வருகிறார். அவர் சில சிறு கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிடுகிறார். பவன்கல்யாண் கஜுவாகா சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார். அவர் தனது மனுவில் ரூ.52 கோடி சொத்து இருப்பதாக குறிப்பிட்டு உள்ளார். அதில் ரூ.12 கோடிக்கு அசையும் சொத்துக்களும், ரூ.40 கோடிக்கு அசையா சொத்துக்களும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அசையும் சொத்துக்களில் தனது மனைவி பெயரில் ரூ.30 லட்சம் சொத்தும், தன்னை சார்ந்தவர்களிடம் ரூ.ஒரு கோடியே 51 லட்சம் சொத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் மனைவி பெயரில் ரூ.40 லட்சம் அசையா சொத்து இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தன்னிடம் ரூ.72 லட்சம் மதிப்புள்ள பென்ஸ்கார், ரூ.ஒரு கோடியே 6 லட்சம் மதிப்புள்ள வால்வோ கார், ரூ. 32 லட்சம் மதிப்புள்ள ஹார்லே டேவிட்சன் கார் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் ரூ.27 லட்சத்துக்கு தனது பெயரிலும், ரூ.9 லட்சத்து 25 ஆயிரத்துக்கு மனைவி பெயரிலும் நகைகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.  அதே நேரத்தில் தனக்கு ரூ.33 கோடி அளவுக்கு கடன் இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து