முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பதக்கம் வென்றவர்களுக்கு பிரதமர் பாராட்டு

வெள்ளிக்கிழமை, 22 மார்ச் 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

பதக்கம் வென்றவர்களுக்கு பிரதமர் பாராட்டு

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் பல்வேறு நாடுகளில் இருந்து 7500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்திய விளையாட்டு வீரர்கள் 85 தங்கம் உள்பட 368 பதக்கங்கள் கைப்பற்றினர். அவர்களுக்கு டுவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இந்தியாவுக்கு பெருமையான நாள் என்று குறிப்பிட்டுள்ளார். பதக்கம் வென்றவர்களின் சாதனைகள், லட்சக்கணக்கான மக்களுக்கு உத்வேகம் அளிக்கும் என்று பிரதமர் கூறியுள்ளார்.

__________

ஐ.பி.எல். போட்டியை ஒளிபரப்ப பாக்.கில் தடை

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் நடந்தபோது அதை இந்திய நிறுவனங்களும், இந்திய அரசும் அணுகியவிதத்துக்கு பதிலடி கொடுக்கும்sவிதமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சரான ஃபாவத் அகமது சவுத்ரி தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டிகளை புல்வாமாவில் நடந்த தாக்குதலைக் காரணம்காட்டி டி ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஒளிபரப்ப மறுத்தது குறிப்பிடத்தக்கது.

____________

டோனி - கோலியின் பேட்டிங் சாதனை

இன்று ஐ.பி.எல். போட்டிகள் தொடங்குகின்றன, முதல் போட்டியே கலக்கலான முந்தைய சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இதுவரை ஐ.பி.எல். சாம்பியன் பட்டமே பார்க்காத ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. சேப்பாக்கத்தில் இன்று தொடக்க விழாவுடன் ஐ.பி.எல். திருவிழா பெரிய அளவில் தொடங்குகிறது. சென்னை ரசிகர்கள் கடந்த முறை தங்கள் ‘தல’ ஆட்டத்தை நேரில் பார்க்க முடியவில்லை. ஆகவே இந்த முறை ஸ்டேடியத்தில் டோனி டோனி என்ற சப்தம் காதைப்பிளக்கும் என்று நம்பலாம்.
2014 முதல் ஆர்சிபி, சென்னை சூப்பர் கிங்ஸை வென்றதில்லை,

அதே போல் சென்னை சேப்பாக்கத்தில் 7 போட்டிகளில் ஆடியுள்ள ஆர்சிபி 6 போட்டிகளில் தோல்வியடைந்தது.இதில் டோனி, கோலி இருவரும் பரஸ்பரம் இரு அணிகளுக்கும் எதிராக வைத்திருக்கும் ஒரு சாதனை அரிதானது, தனித்துவமானதாகும்.  அதாவது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பேட்டிங்கில் சிம்ம சொப்பனமாகத் திகழ்பவர் விராட் கோலி. சிஎஸ்கேவுக்கு எதிராக மட்டுமே 732 ரன்களை விராட் கோலி ஐ.பி.எல். கிரிக்கெட்டில் எடுத்துள்ளார். சிஎஸ்கேவுக்கு எதிராக அதிக ரன்களை எடுத்த ஒரே வீரர் விராட் கோலிதான்.

அதிலும் 12 முறை 30-ம் அதற்கும் கூடுதலான ரன்களை சிஎஸ்கேவுக்கு எதிராக எடுத்துள்ளார் விராட் கோலி, இதுவும் சிஎஸ்கேவுக்கு எதிராக ஒரு வீரர் எடுக்கும் அதிகபட்ச 30+ ஸ்கோர் எண்ணிக்கையாகும். அதே போல் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக டோனி 710 ரன்களை எடுத்து இந்த அணிக்கு எதிராக முதலிடத்தில் இருக்கிறார். இருவரும் ஒவருக்கு எதிராக ஒருவர் சளைத்தவர்களல்லர் என்பதற்கு இந்த புள்ளி விவரம் ஓர் உதாரணமாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து