முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரியகுளம் இடைத்தேர்தல்: அ.தி.மு.க வேட்பாளர் மாற்றம்

வெள்ளிக்கிழமை, 22 மார்ச் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை, அ.தி.மு.க சார்பில் பெரியகுளம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார்.

அ.தி.மு.க சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பாக அறிவிக்கப்பட்டனர். பெரியகுளம் தொகுதியில் ஏற்கெனவே முருகன் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவரை மாற்றி மயில்வேல் என்பவரை வேட்பாளராக அ.தி.மு.க அறிவித்துள்ளது. 

அறிவிப்பு...

இதுதொடர்பாக அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரான துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரான முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருவரும் நேற்று (வெள்ளிக்கிழமை) கூட்டாக வெளியிட்ட அறிவிப்பில், "அ.தி.மு.க ஆட்சி மன்றக்குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி,
18-4-2019 அன்று நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தேனி மாவட்டம், பெரியகுளம் (தனி) சட்டப்பேரவை தொகுதிக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த வேட்பாளருக்கு பதிலாக, அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக மயில்வேல் (தேனி -அல்லி நகர புரட்சித்தலைவி அம்மா பேரவை துணைச் செயலாளர்) தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து