முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் 27-ந்தேதி வைகோ பிரசாரம்

சனிக்கிழமை, 23 மார்ச் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சென்னையில் 27-ந்தேதி பிரசாரம் செய்கிறார்.  
தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பிரசாரம் செய்து வருகிறார்.

இன்று மற்றும் நாளை அவர் பிரசாரம் செய்யவில்லை. மீண்டும் 26-ந்தேதி தொடங்கி 28-ந் தேதி வரை அவர் பிரசாரம் மேற்கொள்கிறார்

அவரது பிரசார விவரத்தை ம.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

26.03.2019 மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை ஆம்பூர், பேரணாம்பட்டு , குடியாத்தம், வேலூர், மேல் விஷாரம், ஆற்காடு , ராணிப்பேட்டை முத்துக்கடை, வாலஜா, சோளிங்கர் பாணாவரம், மணப்பாக்கம், நெமிலி.

27 மார்ச் 2019 மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை வட சென்னை பழனியாண்டவர் கோவில் தெரு, பெரம்பூர்.

மத்திய சென்னை டாணா தெரு, புரசைவாக்கம், தென் சென்னை, தியாகராய நகர் பேருந்து நிலையம் அருகில், மேற்கு சைதாப்பேட்டை சாரதி நகர் பேருந்து நிலையம் அருகில் (ஜோன்ஸ் ரோடு).

மார்ச் 28 மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை விழுப்புரம், உளுந்தூர் பேட்டை, கள்ளக்குறிச்சி, ஆத்தூர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து