முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அஸ்லான் ஷா ஹாக்கி தொடர்: ஜப்பானை வீழ்த்தியது இந்தியா

சனிக்கிழமை, 23 மார்ச் 2019      விளையாட்டு
Image Unavailable

இபோக் : மலேசியாவில் தொடங்கிய அஸ்லான் ஷா ஹாக்கி கோப்பை தொடரின் முதல் போட்டியில் ஜப்பானை  2 -0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.

6 அணிகள்...

28-வது அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டி மலேசியாவில் உள்ள இபோக் நகரில் நேற்று தொடங்கி 30-ம் தேதி வரை நடக்கிறது. இதில் 5 முறை சாம்பியனான இந்தியா, தென்கொரியா, கனடா, ஜப்பான், போலந்து, மலேசியா ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன.  ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழையும்.

இந்தியா வெற்றி...

தொடக்க நாளான நேற்று நடைபெற்ற முதலாவது லீக் ஆட்டத்தில் மன்பிரீத்சிங் தலைமையிலான இந்திய அணி, ஆசிய விளையாட்டு சாம்பியனான ஜப்பானை எதிர்கொண்டது. ஆட்டத்தின் 24வது நிமிடத்தில் இந்திய அணியின் வருண்குமார் ஒரு கோல் அடித்து அணியை 1- 0 என்ற கணக்கில் முன்னிலைக்கு கொண்டுவந்தார்.  ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் கேப்டன் மன்பிரித் சிங் அபாரமாக ஒரு கோல் அடித்தார். அதன்பின் ஜப்பான் அணியினரால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. ஆட்டத்தின் இறுதியில், இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை எளிதில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்தியா தனது அடுத்த லீக் போட்டியில் கொரியாவுடன் இன்று மோதுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து