முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டதாக அமெரிக்கா அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 24 மார்ச் 2019      உலகம்
Image Unavailable

சிரியா : சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில் தாங்கள் போர் முனையில் இருப்பது போன்ற விடியோவை ஐ.எஸ். அமைப்பினர் வெளியிட்டுள்ளனர்.

சிரியாவில் அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படைகள் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்கு பிறகு ஐ.எஸ். அமைப்பினர் ஒழிக்கப்பட்டு விட்டதாக சிரியா ஜனநாயக படையினரும், அமெரிக்க அதிபரும் அறிவித்தனர். இந்நிலையில் ஐ.எஸ். அமைப்பின் பெண் படை பிரிவினர் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருவது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது. புதிதாக வெளியிடப்பட்டிருந்தாலும் இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து