முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவின் பட்டுப்பாதை வர்த்தக ஒப்பந்தத்தில் இத்தாலி கையெழுத்து

ஞாயிற்றுக்கிழமை, 24 மார்ச் 2019      உலகம்
Image Unavailable

பெய்ஜிங் : சீனாவின் புதிய பட்டுப்பாதை வர்த்தகத்தில் இணைவது தொடர்பான ஒப்பந்தத்தில் இத்தாலி கையெழுத்திட்டுள்ளது.  ஆசியாவில் இருந்து ஐரோப்பா வரை தடையற்ற வர்த்தகத்திற்காக சீனா பட்டுப்பாதை வகுத்து வருகிறது. இது ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியிலும் அமைக்கப்படுவதற்கு இந்தியா கடும் ஆட்சேபம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் ஜி 7 நாடுகள் அணியைச் சேர்த முதல் நாடாக இத்தாலி சீனாவின் பட்டுப்பாதை திட்டத்தில் இணைந்துள்ளது.

ரோம் நகரில் சீன அதிபர் சீ ஜின்பிங் இத்தாலியப் பிரதமர் குய்செப் கான்டேயுடன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து, 5 முதல் 7 பில்லியன் யூரோ வரையிலான 29 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து