முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கட்சியின் பெயரில் இருந்து காங்கிரசை நீக்க முடியாது - மம்தா பானர்ஜி தரப்பில் மறுப்பு

ஞாயிற்றுக்கிழமை, 24 மார்ச் 2019      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா : தனது கட்சியின் பெயரில் இருந்து காங்கிரஸ் என்ற பெயரை நீக்க மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி மறுப்பு தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தலுக்கு ஒரு சில வாரங்களே உள்ள நிலையில் மம்தாவிடம், உங்கள் கட்சியின் பெயரான அனைத்து இந்திய திரிணாமுல் காங்கிரஸ் என்பதில் காங்கிரஸ் என்ற பெயரை உங்களின் கட்சி சின்னம், பேனர்கள் மற்றும் போஸ்டர்களில் இருந்து நீக்கி விட்டு, வெறும் திரிணாமுல் என்று மட்டும் குறிப்பிடுவீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர்.

இதற்கு அக்கட்சி சார்பில் வெளியிட்டுள்ள பதிலில், தேர்தல் கமிஷனில் அனைத்து இந்திய திரிணாமுல் காங்கிரஸ் என்ற பெயரில் தான் கட்சியின் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. கட்சியின் பெயர் மற்றும் சின்னத்திற்கு 1998-ம் ஆண்டு ஜனவரி 1 அன்று தேர்தல் கமிஷன் ஒப்புதல் அளித்தது. அதனால் கட்சி பெயரில் இருந்து காங்கிரஸ் என்ற பெயரை நீக்க முடியாது என தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து