முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தோனேசியாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் பீதியடைந்த மக்கள் - ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவு

ஞாயிற்றுக்கிழமை, 24 மார்ச் 2019      உலகம்
Image Unavailable

ஜகார்தா : இந்தோனேசியாவின் சில பகுதிகளில் நேற்று அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் மக்கள் பீதி அடைந்தனர். 6.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சமீபத்திய நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின.

இந்தோனேசியா நாட்டின் வடமேற்கில் உள்ள பென்டோலோ நகரில் நேற்று காலை 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 3 மணி நேரத்துக்கு பின்னர் சுலவேசி தீவில் உள்ள பிட்டுங் நகரில் அடுத்ததாக 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த நிலநடுக்கங்களால் மக்கள் பீதியடைந்த நிலையில் நாட்டின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள வடக்கு மலுக்கு பகுதியில் நேற்று பிற்பகல் 6.3 ரிக்டர் அளவில் மூன்றாவதாக மற்றுமொரு நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கங்களால் அப்பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. சில வீடுகள் சேதமடைந்தன. வீடுகளில் இருந்து ஓட்டம்பிடித்த மக்கள் சாலைகள் மற்றும் திறந்தவெளிகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த  நிலநடுக்கங்களால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் பொருட்சேதம் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து