முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குழந்தைகளை அழைத்து வந்து செல்பி எடுக்க தொல்லை தரும் அதிகாரிகள் - காவல் ஆணையரிடம் டோனி புகார்?

ஞாயிற்றுக்கிழமை, 24 மார்ச் 2019      விளையாட்டு
Image Unavailable

சென்னை : ஓட்டலில் தங்கியிருக்கும் தன்னிடம் செல்பி எடுக்க போலீஸ் உயர் அதிகாரிகள் தங்கள் வீட்டுப் பிள்ளைகளை அழைத்து வந்து தொல்லை தருவதாக சி.எஸ்.கே. கேப்டன் டோனி காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட் சீசன் தொடங்கி விட்டது. சென்னையில் ஆர்.சி.பி. அணிக்கும் சி.எஸ்.கே. அணிக்கும் இடையே முதல் போட்டி நேற்று முன்தினம் நடந்தது. இதில் டோனி தலைமையிலான சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் சென்னை நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ள சி.எஸ்.கே. கேப்டன் டோனி காவல் ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்ததாகக் கூறப்படுகிறது. டோனி தனது அணி மேலாளர் ரசூல் மூலம் இந்தப் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தனிப்பட்ட சுதந்திரத்துக்கு இடையூறு தரும் அளவில் காவல் அதிகாரிகள் தங்கள் வீட்டுப் பிள்ளைகளை அழைத்து வந்து செல்பி எடுக்கவும், போட்டோ எடுக்கவும் நிற்பதாகவும் இது தனக்கு மிகுந்த இடைஞ்சலை உருவாக்கியுள்ளதாகவும் டோனி தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எரிச்சல் ஊட்டும் வகையில் தனது தனிப்பட்ட சுதந்திரத்தைத் தடுக்கும் வகையில் இது எப்படி அனுமதிக்கப்படுகிறது என்றும் டோனி தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்தப் புகார் காவல் ஆணையருக்கு அனுப்பப்பட்டு, அது தெற்கு மண்டல இணை ஆணையர் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

தோனி சாதாரணமாக அனைவருடனும் பழகக்கூடியவர். சமீபகாலமாக மைதானங்களில் ரசிகர்கள் அவரைக் காணவும், அவரிடம் கைகுலுக்கவும் வரும்போது விளையாட்டாக அவர்களிடம் சிக்காமல் ஓடுவார். அவ்வாறு சாதாரணமாக உள்ள டோனியின் சுதந்திரம் பாதிக்கப்படும் அளவில் அதிகாரிகள் செயல்பாடு உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து