முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அயோத்தியில் நாளை பிரியங்கா பிரசாரம்

திங்கட்கிழமை, 25 மார்ச் 2019      இந்தியா
Image Unavailable

லக்னோ : உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் நாளை 27-ம் தேதி பிரசாரம் செய்ய உள்ள பிரியங்கா காந்தி, பாதுகாப்பு கருதி அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்ல மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள 42 பாராளுமன்ற தொகுதிகளுக்கு காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளராக பிரியங்கா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அந்த தொகுதிகளில் காங்கிரசுக்கு வெற்றி தேடி தர அவர் தீவிர பிரசாரத்தை தொடங்கி உள்ளார்.

கடந்த வாரம் 3 நாட்கள் அவர் கங்கையில் படகு பயணம் செய்து தேர்தல் பிரசாரத்தை நடத்தினார். அடுத்த கட்டமாக அவர் பஸ் பயண பிரசாரத்தை நடத்த உள்ளார். பிறகு ரெயில் பயண பிரசாரத்துக்கும் பிரியங்கா திட்டமிட்டு இருக்கிறார்.

பிரியங்காவின் அடுத்த கட்ட பிரசார பயணம் தற்போது வெளியாக தொடங்கி உள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் அயோத்தி பகுதியில் நாளை  27-ம் தேதி அவர் பிரசாரம் செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அயோத்தில் ராமர் கோவில் விவகாரம் மிகப்பெரும் சர்ச்சையாக உள்ளது. இந்த நிலையில் பிரியங்காவின் பிரசாரம் அந்த பகுதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.  அயோத்தி ராமர் கோவிலுக்கு பாதுகாப்பு கருதி பிரியங்கா செல்ல மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து