முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகை சுமலதாவுக்கு ஆதரவாக செயல்பட்ட 7 காங்கிரசார் நீக்கம்

திங்கட்கிழமை, 25 மார்ச் 2019      இந்தியா
Image Unavailable

பெங்களூர், மார்ச் : பா.ஜ.க. ஆதரவில் போட்டியிடும் நடிகை சுமலதாவுக்கு ஆதரவாக செயல்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் 7 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

மறைந்த கன்னட நடிகர் அம்பரீஷின் மனைவி நடிகை சுமலதா மாண்டியா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்பி அவர் சீட்  கேட்டார். ஆனால் மாண்டியா தொகுதியை கூட்டணி கட்சியான மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு ஒதுக்கியது. அங்கு முதல்வர் குமாரசாமி மகன் நிகில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து சுமலதா களம் இறங்கி உள்ளார். சுயேட்சையாக போட்டியிடும் சுமலதாவுக்கு பா.ஜ.க.வும் ஆதரவு தெரிவித்து உள்ளது.

சுமலதாவுக்கு காங்கிரசாரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் சுமலதாவுக்கு ஆதரவாக செயல்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் 7 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதால் அவர்கள் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்த நீக்கப்பட்டுள்ளதாக மாண்டியா மாவட்ட காங்கிரஸ் தெரிவித்து உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து