முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நத்தத்தில் அதிமுக கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம்-வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்பு

திங்கட்கிழமை, 25 மார்ச் 2019      திண்டுக்கல்
Image Unavailable

 நத்தம் -- திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் அதிமுக கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. அதிமுக ஒன்றிய செயலாளர் ஷாஜகான் தலைமை தாங்கினார். வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், கழக பேரவை இணைச் செயலாளர் ஆர்.வி.என் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட பேரவை இணை செயலாளர் ஜெயபாலன், ஒன்றிய இளைஞரணி தலைவர் உத்தமன், மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் அசாருதீன், நகர்பொருளாளர் சீனிவாசன், Ex.மாவட்ட கவுன்சிலர்கள் சின்னாக்கவுண்டர், சத்தியமூர்த்தி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் செல்வி கண்ணன், ஆண்டிச்சாமி, பாஜக மாவட்ட தலைவர் பழனிச்சாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் முனியாண்டி, ஒன்றிய தலைவர் செல்வராஜ், தேமுதிக மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், மாநில பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் லெட்சுமணன், ஒன்றிய செயலாளர் ஆண்டிச்சாமி, நகர செயலாளர் பரமராஜ், பா.ம.க மாவட்ட துணைத் தலைவர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட தலைவர் செல்வம், த.மா.கா நிர்வாகிகள் ரதீஸ்குமார், சுந்தரமூர்த்தி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அ.தி.மு.க நகர செயலாளர் சிவலிங்கம் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து