முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து துணை முதல்வர் ஓ.பி.எஸ் நாளை முதல் 31-ம் தேதி வரை 5 நாட்கள் சுற்றுப்பயணம்

திங்கட்கிழமை, 25 மார்ச் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நாளை முதல் 31 ம்தேதி வரை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 5 நாட்கள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

இதுகுறித்து அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்ட செய்திகுறிப்பு வருமாறு:-

நாளை தொடக்கம்...

அவர் நாளை காலை 9 மணி கள்ளக்குளிச்சி தொகுதி நாடாளுமன்ற தேமுதிக வேட்பாளர் எல்.கே.சுதீஷ் ஆதரித்து சங்கராபுரத்தில் இருந்து தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். அதைத்தொடர்ந்து கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை ஆகிய இடங்களில் பேசுகிறார். இதன் பின்னர் நாளை மாலை, விழுப்புரம் தொகுதி பாமக நாடாளுமன்ற வேட்பாளர் வடிவேல் ராவணனை ஆதரித்து விழுப்புரத்திலும் புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியின் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர்  டாக்டர் மு. நாராயணசாமி, தட்டாஞ்சாவடி தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் சட்டமன்ற வேட்பாளர் நெடுஞ்செழியன் ஆகியோரை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார். இதைத் தொடர்ந்து கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் டாக்டர் கோவிந்தசாமியை ஆதரித்து கடலூர் ரெட்டிச்சாவடி ஊராட்சி ஆகிய இடங்களிலும் இரவு கடலூர் உழவர் சந்தை –அருகிலும் பரங்கிப் பேட்டையிலும் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் பேசுகிறார்.

28ம் தேதி காலை...

இதைத்தொடர்ந்து சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரசேகரை ஆதரித்து நாளை இரவு சிதம்பரம் ஆகிய இடங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். வரும் 28ம் தேதி காலை மயிலாடுதுறை தொகுதி நாடாளுமன்ற அ.தி.மு.க. வேட்பாளர் ஆசைமணியை ஆதரித்து செம்பனார் கோவில் குத்தாலம் பேரளம் ஆகிய இடங்களிலும் நாகப்பட்டினம் தொகுதி நாடாளுமன்ற வேட்பாளர் ம. சரவணனை ஆதரித்தும், திருவாரூர் தொகுதி சட்டமன்ற வேட்பாளர்  ஜீவானந்தம் ஆகியோரை ஆதரித்தும், மாலை 5.30 மணி தஞ்சாவூர் தொகுதி நாடாளுமன்ற வேட்பாளர் நடராஜன், தஞ்சாவூர் தொகுதி சட்டமன்ற வேட்பாளர் காந்தியை ஆதரித்து மாலை 6 மணிக்கும்,  தஞ்சாவூர், திருவெறும்பூர், திருச்சிதொகுதி நாடாளுமன்ற தே.மு.தி.க வேட்பாளர்  இளங்கோவனை ஆதரித்து இரவு 8.30 மணிக்கும் திருச்சி கிழக்கு பகுதியில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகிறார்.

29ம் தேதி காலை...

இதைத்தொடர்ந்து 29 ம்தேதி காலை கரூர் நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க .வேட்பாளர் தம்பிதுரையை ஆதரித்து விராலிமலையில் பிரசாரம் மேற்கொள்ளும் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மணப்பாறகுளித்தலை ஆகிய இடங்களிலும், பெரம்பலூர் தொகுதி நாடாளுமன்ற வேட்பாளர் சிவபதியை ஆதரித்து, முசிறியிலும் நாமக்கல் தொகுதி நாடாளுமன்ற வேட்பாளர் காளியப்பனை ஆதரித்து நாமக்கல்லிலும், திருச்செங்கோடு பள்ளிப்பாளையம் தாதகாப்பேட்டை கேட் ஆகிய இடங்களிலும்,  சேலம் தொகுதி நாடாளுமன்ற அ.தி.மு.க. வேட்பாளர் சரவணனை ஆதரித்து இரவுபட்டைக்கோவில் வின்செண்ட் ஆகிய இடங்களிலும் பிரசாரம் மேற்கொள்கிறார்.

30ம் தேதி காலை...

30ம் தேதி காலை உடைசல்பட்டி கூட்டுரோட்டில் தருமபுரி தொகுதி நாடாளுமன்ற பாமக வேட்பாளர் அன்புமணி பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி சட்டமன்ற வேட்பாளர் கோவிந்தசாமி ஆகியோரை ஆதரித்து கம்பைநல்லூர் ஆகிய அரூர் தொகுதி சட்டமன்ற வேட்பாளர் சம்பத்குமாரை ஆதரித்து பெரியாம்பட்டி ஆகிய இடங்களில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் மேற்கொள்கிறார். கிருஷ்ணகிரி தொகுதி நாடாளுமன்ற வேட்பாளர் கே.பி.முனுசாமி, ஓசூர் தொகுதி சட்டமன்ற வேட்பாளர்ஜோதி பாலகிருஷ்ணாரெட்டி சூளகிரி, கிருஷ்ணகிரி, மத்தூர், பர்கூர், ஊத்தங்கரை ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

31ம் தேதி காலை..

31ம் தேதி காலை வேலூர் தொகுதி நாடாளுமன்ற வேட்பாளர்  ஏ.சி.சண்முகம்,  குடியாத்தம் தொகுதி சட்டமன்ற வேட்பாளர் கஸ்பா சு.மூர்த்தி ஆகியோரை ஆதிர்தது ஆம்பூர், சோளிங்கர் பகுதிகளில் பிரசாரம் செய்கிறார். அரக்கோணம் தொகுதி நாடாளுமன்ற வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியை ஆதரித்து ஆரணி பேருந்து நிலையம், போளூர், கலசபாக்கம், செங்கம், திருவண்ணாமலை ஆகிய இடங்களிலும் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக அ.தி.மு.க. தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து