முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் தேர்தல் - திருவிழா தொடர்பான போலீஸ் - சிறப்பு காவல் துறை இயக்குனர் கலந்தாய்வு கூட்டம்

வியாழக்கிழமை, 28 மார்ச் 2019      மதுரை
Image Unavailable

     மதுரை -மதுரையில் நேற்று காலை  மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் சிறப்பு காவல் துறை இயக்குனர் சட்டம் மற்றும் ஒழுங்கு,  விஜய்குமார்  தலைமையில் எதிர்வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தல்,  மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்  பாதுகாப்பு பணி மற்றும் சித்திரை திருவிழா பாதுகாப்பு பணி குறித்த சிறப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் சிறப்பு காவல்துறை இயக்குனர் விஜய் குமார் சக போலீஸ் அதிகாரி களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கி பேசினார். நடைபெற உள்ள நாடாளுமன்ற பொது தேர்தலில் எவ்வித சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளும் ஏற்படாமல் அமைதியாக நடைபெற அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்வது தொடர்பாக உயர் அதிகாரிகள் ஆலோசனை வழங்கினர். மேலும் அவர் கூறுகையில் மதுரை மாநகரில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் அறிவிக்கை வெளியிட்ட பின்பு இது நாள் வரையில்  53  வழக்குகள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய காரணத்திற்காக பதிவு செய்யப்பட்டு உள்ளன. பறக்கும் படையினரால் ரூபாய்.5,13,66,690/- பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றும், காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் பதற்றம் நிறைந்த பகுதிகளில் அடிக்கடி ரோந்து சென்றும் பொதுமக்களுக்கு நம்பிக்கையூட்டவும், தேர்தலின் போது அச்சமின்றி வாக்களிப்பதை உறுதிசெய்யும் வகையில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுக்க அறிவுறுத்தினார்.  பாதுகாப்பு பணியினை திறம்பட செயல்படுத்தவும் தகவல் பரிமாற்றத்தை துரிதமாக மேற்கொள்ளவும் தொலைத்தொடர்பு திட்டம் (COMMUNICATION PLAN) தீட்டப்பட்டு அதற்கான உபகரணங்கள் ஆயத்தநிலையில் உள்ளன என்றும்,  இவை தவிர சட்டம் ஒழுங்கிற்கு குந்தகம் விளைவிக்க கூடிய பகுதிகள்  எவை என   கண்டறியப்பட்டு அங்கு தேவையான அளவில் நிலைகுழுக்களும் (PICKETS) அதிவிரைவுப்படையினர் (QUICK  REACTION TEAM) மற்றும் டெல்டா வாகனங்களும் சேர்ந்து ரோந்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும்  , மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு தேர்தல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் முழுவீச்சில் கண்காணிக்கப்பட்டு வருகின்றது எனவும் சிறப்பு காவல்துறை இயக்குனர் விஜய் குமார் தெரிவித்தார். மேலும் சித்திரை திருவிழா நிகழ்ச்சிக்கு வருகைதரும் உள்ளூர் மற்றும் வெளியூர் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக  3000 காவல்துறையினர் நியமிக்க்கபட உள்ளதாகவும்,பொதுமக்களின் உடைமைகளை பாதுகாக்கவும் மற்றும் குற்றவாளிகளின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக 400 CCTV  கேமிராக்கள் பொருத்தப்பட உள்ளதாகவும் மேலும் திருவிழாவில் கலந்துகொள்வதற்காக வருகை தரும் பொதுமக்களின் வாகனங்களை நிறுத்துவதற்கென தனி  இடம் ஒதுக்கப்பட உள்ளதாகவும், பொதுமக்கள் சிரமமின்றி சாலையில் பயணம் செய்யவும் மற்றும் சாலையை கடக்கவும்  போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் தடுப்பாண்கள் அமைக்க ஏற்பாடு   செய்துள்ளதாகவும், குழந்தைகளை தவறவிடும் பெற்றோர்கள் உடனுக்குடன் காவல்துறையை தொடர்புகொண்டு ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்து குழந்தைகளை விரைவில் மீட்கும் வசதிகளும் செய்யப்பட உள்ளதாகவும், குற்றங்கள் நடைபெறாமல் முன்கூட்டியே தடுக்கும் பொருட்டு குற்றப்பிரிவு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்போவதாகவும் மேலும் அவர் தெரிவித்தார். இந்த கலந்தாய்வு கூட்டத்தில் மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம்  தென் மண்டல காவல் துறை தலைவர் சண்முக ராஜேஸ்வரன்,  காவல் துறை தலைவர் பொருளாதார குற்றப்பிரிவு  மனோகரன் ,  காவல் துறை துணை தலைவர்  எழிலரசன்,  நிர்வாகம் மதுரை சரக துணை தலைவர் பிரதீப் குமார் ,  ராம்நாடு சரக காவல் துணை தலைவர்  காமினி ,  திண்டுக்கல் சரக காவல் துணை தலைவர் ஜோசிநிர்மல் குமார் ,  மதுரை மாநகர காவல் துணை ஆணையர்கள் சசிமோகன்  சட்டம் & ஒழுங்கு,  செந்தில்குமார்,  TPS. குற்றம்,  மகேஷ்  ,  தலைமையிடம் அருண் பால கோபாலன்  போக்குவரத்து ,  முருகேசன் TPS., ஆயுதப்படை,  மற்றும் தேர்தல் பிரிவு காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன், ராம்நாடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் புலனாய்வு பிரிவு காவல் கண்காணிப்பாளர் பழனிகுமார், த.சி.கா.ஆறாம் அணி கமாண்டென்ட் சுகுமார், காவலர் பயிற்சி கல்லூரி காவல் கண்காணிப்பாளர் மணி, சிறப்பு நுண்ணறிவு பிரிவு காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசு பாதம், நில அபகரிப்பு தடுப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளர்  நாகஜோதி, ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து