முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பட்டியல் இனத்தவா்கள் 6 பிரிவை ஒன்றாக சோ்க்க குழு அமைத்து ஆணை பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்: ராமதாஸ் பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 31 மார்ச் 2019      மதுரை
Image Unavailable

 வத்தலக்குண்டு -தமிழகத்தில் பட்டியல் இனத்தவா்கள் 6 பிரிவை ஒன்றாக சோ்க்க குழு அமைத்து ஆணை பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என டாக்டா் ராமதாஸ் பேசினார்.
    திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் நிலக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் அதிமுக சட்டமன்ற வேட்பாளா் தேன்மொழி சேகர் மற்றும் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளா் ஜோதிமுத்துவை ஆதரித்து  பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனா் டாக்டா் ராமதாஸ் ஓட்டு சேகரித்து பேசினார்.  அவா் பேசும் போது விவசாயிகளுக்காக கடந்த 11 ஆண்டுகளாக நிழல் பட்ஜெட் தயாரித்து வழங்கியுள்ளேன். இந்த வருடம் பயன் கொள்ளும் அளவில் விவசாயிகளுக்கான தனி பட்ஜெட் தாயரித்து தமிழக முதல்வா் மூலமாக பயன் பெறும் வகையில் செயல்படுத்துவேன்.  ஏன்என்றால் தமிழக முதல்வரும் விவசாயிதான். திண்டுக்கல் பாராளுமன்ற  பட்டாளி மக்கள் கட்சி வேட்பாளா் ஜோதிமுத்து மற்றும் நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினா் தேன்மொழியை எதிர்த்து நிர்பவா்கள் டெபாசிட் இழக்க வேண்டும். நாங்கள் வெற்றி பெற்றால் தமிழக மக்களின் நலனுக்காக அவா்களின் உரிமைகளை போராடி வெற்றி பெறுவோம். எங்களை திட்டுவதான் எதிர்கட்சியினரின் வேலையாக உள்ளது. பட்டியல் இனத்தை சோ்ந்த பண்ணாடி, காலடி, பள்ளன், குடும்பன், சடையன், தேய்வேந்திரகுலத்தான் ஆகிய 6 பிரிவுகளை ஒன்றாகி தேய்வேந்திர குல வேளாளா் என ஆணைபிறப்பிக்க குழு போட்டு செயல்படுத்துவோம். அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஜாக்டோ ஜீயோ அமைப்பை சேர்ந்தவர்களின் கோரிக்கைகளை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் எடப்பாடி ஆகியோர் கலந்து ஆலோசித்து தேர்தலுக்கு பின் உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் எதிர் கட்சிகளிடம் உங்கள் கோரிக்கைளை பற்றி பேசி எந்த பயனும் இல்லை திண்டுக்கல் இடைத்தேர்தலை 1973ஆம் வருடம் மாயத்தேரை அறிமுகப்படுத்தி புரட்சித்தலைவர் எம்.ஜு.ஆர். பெற்று தந்த சின்னம் தான் இந்த இரட்டை இலை அன்று முதல் இன்று வரை இந்த இரட்டை இலை திண்டுக்கல் தொகுதியில் தோற்றதாக வரலாறு இல்லை என பேசினார். இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக வனத்துறை அமைச்சா் திண்டுக்கல் சீ.சீனிவாசன், கழக அமைப்பு செயலாளர் நத்தம் விஸ்வநாதன், மாவட்ட செயலளார் மருதராஜன்,  எம்.பி உதயகுமார், ஒன்றிய கழக செயலளார் பாண்டியன், நகர செயலளார் பீர்முகமது, நிலக்கோட்டை ஒன்றிய கழக செயலளார் யாகப்பன், நிலக்கோட்டை தொகுதிக கழக செயலாளர் கனகதுரை, முன்னாள் யூனியன் சேர்மன் மோகன், மாவட்ட மகளீர் அணி செயலாளர் வளர்மதி,  வத்தலக்குண்டு பேரூராட்சி முன்னாள் கவுன்சிலரும் மக்கள் சேவகருமான கனிபாய், நிலக்கோட்டை கூட்டுறவு வீடுகட்டும் சங்க தலைவர் நாகராஜன், பேரூர் கழக செயலளார்கள் ராஜசேகர், சேகர், தண்டபாணி, மாசாணம், கூட்டுறவு பண்டகசாலை தலைவர் ரத்தினம், முன்னாள் யூனியன் கவுன்சிலர் தட்டிமுருகன், பட்டாளி மக்கள் மாநில பொருளாளர் திலகபாமா, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் அன்னகளஞ்சியம், கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் சுதாகர், ஜெயப்பிரகாஷ், தகவல் தொழில் நுட்ப பிரிவு சதீஸ், அதிமுக நிர்வாகிகள் ஹபீப்ராஜா, பொங்கு என்ற இளங்கோ, நல்லமுகமது, அண்ணா தொழிற்சங்க துணை தலைவர் முத்துகிருஷ்ணன், ஜெயராமன், பூக்கடை சரவணன்  மற்றும் கூட்டணி கட்சியினா்  அனைத்து நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜான் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து