முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடியார் பிரச்சாரம் தொடர்பாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது

திங்கட்கிழமை, 1 ஏப்ரல் 2019      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடியார் மேற்கொள்ளவிருக்கும் பிரம்மாண்டமான தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் திருமங்கலம் ஹரீஸ் ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது.
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக முதல்வர் எடப்பாடியாரும்,துணை முதல்வர் ஒபன்னீர்செல்வமும் தமிழகம் முழுவதிலும் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்குச் சேகரித்து வருகின்றனர்.இந்நிலையில் மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்தில் வரும் ஏப்ரல் 5-ம் தேதி வெள்ளிக் கிழமை மற்றும் 6-ம் தேதி சனிக்கிழமை தமிழக முதல்வர் எடப்பாடியார் தீவிர பிரச்சாரம் மேற்கொள்கிறார்.அதன்படி 5ம் தேதி காலை 11மணியளவில் திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கள்ளிக்குடி-காரியாபட்டி சந்திப்பில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதி தே.மு.தி.க வேட்பாளர் ஆர்.அழகர்சாமியை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்.பின்னர் 6ம் தேதி காலை 8.30மணிக்கு சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட அலங்காநல்லூர் கேட்கடை பகுதியில் தேனி பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் ப.ரவீந்திரநாத்குமாரை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்.இதைதொடர்ந்து காலை 9.15மணியளவில் திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செக்காணூரணியில் விருதுநகர் தொகுதி தே.மு.தி.க வேட்பாளர் ஆர்.அழகர்சாமியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார்.இதையடுத்து உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உசிலம்பட்டி தேவர்சிலை பகுதியில் தேனி பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் ப.ரவீந்திரநாத்குமாரை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடியார் பிரச்சாரம் செய்கிறார்.
மதுரை புறநகர் மாவட்டத்தில் தமிழக முதல்வர் பிரச்சாரம் செய்திட வருகை தரும் போது மேற்கொள்ள வேண்டிய வரவேற்பு மற்றும் தேர்தல் பிரச்சார ஏற்பாடுகளை சிறப்பாக செய்திடுவது தொடர்பான அ.தி.மு.க மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருமங்கலம் ஹரீஸ் ஹோட்டலில்வெகு சிறப்பாக நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு சோழவந்தான் எம்.எல்.ஏ.,மாணிக்கம் முன்னிலை வகித்தார்.மாவட்ட கழக துணைச் செயலாளர் அய்யப்பன் வரவேற்று பேசினார்.ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டஇந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர்,கழக அம்மா பேரவைச் செயலாளர்,மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் ஆர்.பி.உதயகுமார் தலைமையேற்று வரும் 5,6-ம் தேதிகளில் மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடியார் பிரச்சாரத்திற்கு வருகை தந்திடும் போது மேற்கொள்ள வேண்டிய வரவேற்பு மற்றும் தேர்தல் பிரச்சாரம் தொடர்பான பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.அப்போது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது: மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்தில் நடைபெற்று வரும் தேர்தல் பிரச்சாரத்தின் போது மாபெரும் எழுச்சி காணப்படுகிறது.கடந்த 72-ம் ஆண்டு ஏற்பட்ட எழுச்சி போன்று தற்போதும் மாபெரும் எழுச்சி காணப்படுகிறது.அதற்கு பெண்கள் அலைகடலென திரண்டு வருவதே சாட்சியாகும்.அதே போல் வரும் 5 மற்றும் 6ம் தேதிகளில் தமிழக முதல்வர் எடப்பாடியார் அவர்கள் மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்தில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரச்சாரம் செய்திட வருகை தரும்போது லட்சக்கணக்கான மக்கள் அலைகடலென திரண்டு வந்து வரலாறு காணாத வகையில் தமிழக முதல்வருக்கு வரவேற்பு கொடுத்து தேர்தல் பிரச்சாரத்தை மாபெரும் வெற்றி பெறச்செய்திட வேண்டும் என்று பேசினார்.
அப்போது மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல்,மாவட்ட கழக துணைச் செயலாளர் பஞ்சம்மாள்,முன்னாள் எம்.எல்.ஏ.,கருப்பையா,மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ்ச்செல்வம்,இலக்கியஅணி திருப்பதி,மீனவரணி போத்திராஜ்,விவசாய அணி வேலுச்சாமி,மாவட்ட எம்.ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி,திருமங்கலம் நகரச்செயலாளர் ஜே.டி.விஜயன்,ஒன்றிய செயலாளர்கள் வக்கீல்.அன்பழகன்,ராமசாமி,மகாலிங்கம்,பிச்சைமணி,முருகேசன்,செல்லப்பாண்டி,முன்னாள் யூனியன் சேர்மன் தமிழழகன்,முன்னாள் நகர் மன்ற துணைத்தலைவர் சதீஸ்சண்முகம்,திருமங்கலம் நகர் அவைத்தலைவர் ஜஹாங்கீர்,ஒன்றிய அவைத்தலைவர் அன்னக்கொடி,துணை செயலாளர் சுகுமார்,சுமதிசாமிநாதன்,கட்சி நிர்வாகிகள் பிரேம்ஆனந்த்,பிரபுசங்கர்,வேல்ராமகிருஷ்ணன்,பாஸ்கரன்,பாலசுப்பிரமணியன்,நெடுமாறன்,முத்துராஜா,வெங்கடேஸ்வரன்,ராம்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து