முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலக்கோட்டை அதிமுக வேட்பாளர் தேன்மொழி சேகரை ஆதரித்து நடிகர்கள் தீவிர பிரச்சாரம்

செவ்வாய்க்கிழமை, 2 ஏப்ரல் 2019      திண்டுக்கல்
Image Unavailable

 வத்தலக்குண்டு -நிலக்கோட்டை அதிமுக வேட்பாளர் தேன்மொழி சேகரை ஆதரித்து ஒரே நாளில் நடிகை பவிதா, நடிகர் வையாபுரி ஆகியோர் மக்கள் வெள்ளத்தில் தீவிர பிரச்சாரம் செய்தார்கள்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்;செல்வம் தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கழக அமைப்புச் செயலாளர் நத்தம் விஸ்வநாதன், மாவட்ட கழக செயலாளர் மருதராஜ் ஆகியோர் ஆசியுடன் போட்டியிடும் வேட்பாளர் தேன்மொழி சேகர் போட்டியிடுகிறார். நிலக்கோட்டை தொகுதியைச் சேர்ந்த நிலக்கோட்டை ஒன்றிம், வத்தலக்குண்டு ஒன்றியம் ஆகிய பகுதிகளில் தீவிர பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. நிலக்கோட்டை ஒன்றியத்தில் எம்.பி.உதயக்குமார், ஒன்றிய கழக செயலாளர் யாகப்பன் அம்மையநாயக்கனூர் பேரூர் செயலாளர் தண்டபானி, நிலக்கோட்டை பேரூர் கழக செயலளர் சேகர், கூட்டுறவு வீடுகட்டும் சஙகத்தலைவர் நாகராஜன் ஆகியோர் தலைமையில் தீவிரமாக வாக்கு சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் சினிமா நடிகை பவிதா கலந்து கொண்டு அம்மையநாயக்கனூர், பள்ளபட்டி, சிலுக்குவார்பட்டி, நிலக்கோட்டை ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரித்தார். தமிழக அரசின் சாதனைகளை தெளிவாக எடுத்துக்கூறி வாக்கு சேகரித்தார்.
 வத்தலக்குண்டு ஒன்றியம்
வத்தலக்குண்டு ஒன்றியத்தில் அதிமுக செயலாளர் பாண்டியன், நகர கழக செயலாளர் பீர்முகமது, தொகுதி கழக செயலாளர் கனகதுரை, முன்னாள் யூனியன் பெருந்தலைவர் மோகன், மற்றும் அதிமுக நிர்வாகிகளுடன் நிலக்கோட்டை அதிமுக வேட்பாளர் தேன்மொழி சேர்ந்து தீவிர வாக்கு சேகரித்து வருகிறார்கள். நேற்று சினிமா நடிகர் வையாபுரி கலந்து கொண்டு வத்தலக்குண்டு, பழையவத்தலக்குண்டு, வாடிப்பட்டி, பட்டிவீரன்பட்டி ஆகிய பகுதிகளில் தமிழக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி மக்கள் வெள்ளத்தில் வாக்கு சேகரித்து வருகிறார்கள். சென்ற இடம் எல்லாம் சினிமா நடிகர்களக்கு அமோக வரவேற்பு கொடுத்தார்கள். இரண்டு ஒன்றியத்திலும் தீவிர பிரச்சாரத்தின்போது பலத்து போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து