முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெருங்காமநல்லூர் தியாகிகளின் 100வது ஆண்டு நினைவு தினம்: ஒ.சுந்தரச்செல்வி ஒச்சாத்தேவர் தலைமையில் மூ.மு.க.வினர் அஞ்சலி

புதன்கிழமை, 3 ஏப்ரல் 2019      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- 1920ம் ஆண்டில் குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்து வீரமுடன் போராடி ஆங்கிலேயரின் துப்பாக்கி சூட்டில் உயிர்நீத்த வீரமங்கை மாயக்காள் உள்ளிட்ட 16பேர் உயிர்நீத்த இடமான மதுரை மாவட்டம் பெருங்காமநல்லூரில் உள்ள தியாகிகள் நினைவிடத்தில் 100வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மூ.மு.க மாநில மகளிரணி செயலாளர் திருமதி. ஒ.சுந்தரச்செல்வி ஒச்சாத்தேவர் தலைமையில் மூ.மு.க.வினர் ஏராளமானோர் மாலையணிவித்து மலரஞ்சலி செலுத்தினார்கள்.
வரலாற்றில் ஆங்கிலேய அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்ட அடக்குமுறைச் சட்டங்களில் 1911ம் ஆண்டு சென்னை மாகாண ஆங்கிலேய அரசினால் கொண்டு வரப்பட்ட குற்றப்பரம்பரைச் சட்டம் மிகவும் கொடுமையானதாகும்.இந்தச் சட்டத்தின் கீழ் மதுரை மாவட்டம் பெருங்காமநல்லூர் கிராமத்தில் குறிப்பிட்ட சமுதாய மக்களிடமிருந்து கைரேகைகளை பதிவுசெய்திட ஆங்கிலேய போலீசார் நெருக்கடி கொடுத்தனர்.அப்போது 1920ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ம்தேதி குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்து அப்பகுதி மக்கள் கடுமையான கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.அப்போது பெருங்காமநல்லூர் கிராமத்தை சுற்றி வளைத்த ஆங்கிலேய போலீஸ்படைகள் குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்து துணிவுடன் போராட்டம் நடத்திய வீரமங்கை மாயக்காள் உள்ளிட்ட 16பேரை ஈவு இரக்கமின்றி கொடூரமான முறையில் சுட்டுக்கொன்றனர்.இந்திய வரலாற்றில் இந்த சம்பவம் தென்னாட்டு ஜாலியன் வாலாபாக் படுகொலை என்று அழைக்கப்படுகிறது.
தன்மானம் காத்திட ஆங்கிலேயரின் குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்து துணிவுடன் போராடி உயிர்நீத்த பெருங்காமநல்லூரில் நினைவுத்தூணுடன் கூடிய தியாகிகள் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.இங்கு பல்வேறு கட்சிகள் சார்பில் ஆண்டு தோறும் ஏப்ரல் 3ம் நாள் போராட்டத்தில் உயிர்நீத்த 16 தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திடும் நிகழ்ச்சி ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது.இதன் ஒருபகுதியாக ஆங்கிலேயரின் துப்பாக்கி சூட்டில் உயிர்நீத்த தியாகிகளின் 100வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பெருங்காமநல்லூர் நினைவிடத்தில் நேற்று மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜி.எம்.ஸ்ரீதர் வாண்டையார் ஆணைக்கிணங்க அக்கட்சியின் சார்பில் அஞ்சலி செலுத்திடும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.இதையடுத்து தியாகிகளின் நினைவிடம் அமைந்துள்ள பெருங்காமநல்லூருக்கு வாகனங்களில் பேரணியாக சென்ற மூ.மு.க.வினர் முதலில் துப்பாக்கிசூடு நடைபெற்ற இடத்தில் மலர்மாலை வைத்து வீரவணக்கமிட்டு அஞ்சலி செலுத்தினார்கள்.பின்னர் குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்து உயிர்நீத்த தியாகிகளின் நினைவிடத்தில் அமைந்துள்ள நினைவுதூணில் மூ.மு.க மாநில மகளிரணி செயலாளர் திருமதி.ஒ.சுந்தரச்செல்வி ஒச்சாத்தேவர்  தலைமையில் ஊர்வலமாக வந்த மூ.மு.க.வினர் மலர்வளையம் வைத்து வீரவணக்கத்துடன் மலரஞ்சலி செலுத்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் சிவரக்கோட்டை வி.செல்வம்,இளைஞரணி ராகேஷ் ஒச்சாத்தேவர்,மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆவல்சூரன்பட்டி ஈஸ்வரன்,திருமங்கலம் ஒன்றிய செயலாளர் குட்டி,உசிலம்பட்டி நகர் செயலாளர் எஸ்.பி.சுதர்,சேடபட்டி ஒன்றிய செயலாளர் மஹாராஜா,தென்னமநல்லூர் செந்தில்குமார்,,சமத்துவபுரம் சேகர்,புளியங்குளம் முத்துமுருகன்,சோமு,சிவரக்கோட்டை முத்துவேல்,ஆவல்சூரன்பட்டி குருராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து