திமுக கூட்டணியால் எந்த பயனும் கிடையாது. முதல்வர் பழனிச்சாமி பேச்சு.

புதன்கிழமை, 3 ஏப்ரல் 2019      சிவகங்கை
2 eps news

சிவகங்கை - சிவகங்கையில் பா.ஜ.க சார்பில் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எச்.ராஜாவை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் பழனிச்சாமி பேசுகையில் திமுக கூட்டனி ஒரு சுயநல கூட்டணி அந்த கூட்டணியால் எந்த பயனும் கிடையாது என பேசினார்.
சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சியான பா.ஜ.க சார்பில் எச்.ராஜா போட்டியிடுகிறார். இன்நிலையில் அவருக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் தமிழக முதல்வரும் அதிமுக இனை ஒருங்கினைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு வேன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதில் அவர் தொண்டர்கள் மத்தியில் பேசுகையில்ப.சிதம்பரம் பலமுறை தேர்வு செய்தும் நாட்டுக்கே நிதி அளிக்கக்கூடிய அமைச்சராக இருந்தும் தொகுதிக்கும் தமிழகத்திற்கும் ஒன்றுமே செய்யவில்லை. அவரே செய்யாதபோது மகன் என்ன செய்வார் என்றும் கேள்வி எழுப்பியதுடன்?
தேர்தலுக்கு தேர்தல் வாக்குறுதிகளை மட்டும் அள்ளி வீசுவார்கள். தேர்தல் முடிந்ததும் அப்படியே தூக்கி வீசிவிட்டு சென்றுவிடுவார்கள் என்றும் ஹெச்.ராஜா சிறந்த நிர்வாகி, மக்கள் பிரச்சினையை தீர்க்காமல் தூங்கமாட்டார். மத்தியில் நிலையான ஆட்சி அமைந்தால்தான் வளர்ச்சி திட்டங்கள் கிடைக்கும் என்றும் தெரிவித்தார் மேலும் அமித்ஷா தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்குவதாக கூறியுள்ளார். அதனை தொடர்ந்து தேர்தல் முடிந்ததும் அறிவித்தபடி அனைத்து தொழிலாளர்களுக்கும் ரூ.2000 வழங்கப்படும் என்றும் கூறியதுடன் திமுக ஆட்சியில் தொடர்ந்து மின்வெட்டு இருந்தது. அதிமுக ஆட்சியில் மின்மிகை மாநிலம் என்று விருது பெற்றுள்ளோம்.
மேலும் தமிழ்நாட்டில் சட்டம்ஒழுங்கு சரியாக உள்ளது. அமைதி பூங்காவாக திகழ்கிறது. சாலை வசதி சிறப்பாக இருப்பதால் தொழில் துவங்க உகந்த மாநிலமாக தொழில் முதலீட்டாளர்கள் விரும்புகிறார்கள். என பேசிய அவர் தொடர்ந்து உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் 3 லட்சத்தி 431 கோடி முதலீடு கிடைத்துள்ளது என்றும் திமுக கூட்டணி ஒரு சுயநல கூட்டணி அந்த கூட்டணியால் எந்த பயனும் கிடையாது என்றும் பேசினார். 
மேலும் தகுதியான பிரதமர் மோடி. நாட்டின் பாதுகாப்புக்காக மீண்டும் அவரே பிரதமராக வர வேண்டும். என்றும் பேசினார். இந்த பிரச்சாரத்தின் போது வேட்பாளர் எச்.ராஜா மற்றும் மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் பாஸ்கரன் மற்றும் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து