முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊடக சான்று மற்றும் கண்காணிப்பு குழு சான்றொப்பம் பெற்ற பின்னரே தேர்தல் தொடர்பான விளம்பரங்களை ஒளிபரப்ப வேண்டும் தேனி மாவட்ட தேர்தல் அலுவலர்

வியாழக்கிழமை, 4 ஏப்ரல் 2019      தேனி
Image Unavailable

தேனி,- தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், 33.தேனி பாராளுமன்ற பொதுத்தேர்தல் - 2019 மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்களின் தேர்தல் விளம்பரம் தொடர்பாக கேபிள் டிவி உரிமையாளர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் (ம) மாவட்ட ஆட்சித்தலைவர்   ம.பல்லவி பல்தேவ்,  தலைமையில் (  நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் (ம) மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவித்ததாவது:-

பாராளுமன்ற தேர்தல்-2019 மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, வேட்பாளர்களின் தேர்தல் செலவினத்தை கண்காணிக்க, தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரை தலைவராகக் கொண்டு மத்திய, மாநில மற்றும் ஊடக குழு உறுப்பினர் ஆகியோரைக் கொண்ட ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இக்கண்காணிப்பு குழுவால் வாக்குப்பதிவு நடைபெறும் வரை 24 மணி நேரமும் செயற்கைகோள் மற்றும் உள்ளுர் தொலைக்காட்சி சேனல்கள் கண்காணிக்கப்பட உள்ளது. உள்ளுர் கேபிள் தொலைக்காட்சிகளில் வேட்பாளர்கள் அல்லது அரசியல் கட்சிகள் தேர்தல் தொடர்பான விளம்பரங்களை ஒளிபரப்பு செய்யும் முன், தேர்தல் குறித்த விளம்பரங்கள் ஊடக சான்று மற்றும் கண்காணிப்பு குழுவால் அனுமதிக்கப்பட்டுள்ளதா என்பதனை பார்த்து ஒளிபரப்பிட வேண்டும். விளம்பரம் குறித்த விபரங்கள் இரண்டு நகல்களிலும், விளம்பரம் தயாரிப்பு மேற்கொள்ளப்பட்டதற்கான செலவினத் தொகைக்கான பட்டியல் போன்றவற்றை உரிய படிவத்துடன் ஊடகச்சான்று மற்றும் கண்காணிப்பு குழுவிடம் சமாப்பிக்க வேண்டும்.
அனுமதி வழங்கப்பட்ட விளம்பரங்களை மட்டுமே ஒளிபரப்பு செய்திட வேண்டும். விளம்பரத்தில் ஊடக சான்று மற்றும் கண்காணிப்புக் குழுவினரால் வழங்கப்பட்ட அனுமதி எண்ணையும் அதில் இடம்பெற செய்திட வேண்டும். சாதி, மத, இன, மொழி மற்றும் இன்னபிற மோதல்களை தூண்டுகிற வகையிலோ, தனிமனித வாழ்க்கை பற்றியோ, பண்பாட்டிற்கு குறைவான விளம்பரங்களையோ ஒளிபரப்பு செய்திட கூடாது.
உரிய அனுமதி பெறாமல் தேர்தல் தொடர்பான விளம்பரங்கள் உள்ளுர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டால் சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எனவே, அனைத்து கேபிள் ஆப்பரேட்டர்களும் உரிய அனுமதி பெற்று தேர்தல் விளம்பரங்களை ஒளிபரப்புமாறு மாவட்ட தேர்தல் அலுவலர் (ம) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ம.பல்லவி பல்தேவ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.கந்தசாமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஆ.செந்தில் அண்ணா, கேபிள் டிவி வட்டாட்சியர் க.நஜிமுன்னிஷா மற்;றும் உள்ளுர் கேபிள் தொலைக்காட்சி ஆப்ரேட்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து