முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தோல்வி பயத்திலே ராகுல்காந்தி 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார்- வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தாக்கு

வியாழக்கிழமை, 4 ஏப்ரல் 2019      திண்டுக்கல்
Image Unavailable

நத்தம்,- திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட நத்தம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சி பாமக வேட்பாளர் ஜோதிமுத்து சிறுகுடி பகுதியில் தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.அங்கு அவரை பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்றனர். வேட்பாளருடன் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், மாவட்ட செயலாளர் மருதராஜ், மாநில ஜெ.பேரவை இணை செயலாளர் கண்ணன், ஒன்றிய செயலாளர் ஷாஜகான், நகர செயலாளர் சிவலிங்கம், மாவட்ட பேரவை இணை செயலாளர் ஜெயபாலன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் உத்தமன், நகர்பொருளாளர் சீனிவாசன் உள்ளிட்ட அதிமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.தொடர்ந்து கோட்டையூர்,ஆவிச்சிபட்டி,குட்டுபட்டி,கோசுகுறிச்சி,சொறிபாறைபட்டி,மங்களபட்டி,சிரங்ககாட்டுபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மாம்பழச் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தனர்.இதில் வேட்பாளர் ஜோதிமுத்துவை ஆதரித்து வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது : பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிடுவதால் தேர்தல் தோல்வி பயத்திலேயே தான் ராகுல்காந்தி வயநாடு, அமேதி உள்ளிட்ட 2 தொகுதியில் போட்டியிடுகிறார். அதிமுக ஆட்சியில் செய்த திட்டங்கள் அனைத்தையும் திமுக செய்ததாக கூறி வாக்குக்காக திமுகவினர் பொய் பிரச்சாரம் செய்துவருகின்றனர். இந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் கட்சிகள் இணையாது என்று நினைத்த திமுகவிற்கு வெற்றி கூட்டணி அமைந்ததை திமுகவால் ஏற்றுகொள்ள முடியவில்லை.40 நாடாளுமன்ற தொகுதி உள்பட 18 சட்டமன்ற இடைதேர்தலிலும் அதிமுக அமோக வெற்றி பெறும். மறுபடியும் நரேந்திர மோடியே பிரதமர் ஆவார். இவ்வாறு அவர் பேசினார்.இந்த பிரச்சாரத்தின் போது பாஜக, தேமுதிக, த.மா.க மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து