முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹாக்கி - இந்திய பெண்கள் அணி வெற்றி

வெள்ளிக்கிழமை, 5 ஏப்ரல் 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

இந்தியா-மலேசியா பெண்கள் ஹாக்கி அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட போட்டி தொடரில் முதலாவது ஆட்டம் கோலாலம்பூரில் நேற்று முன்தினம் நடந்தது.

விறுவிறுப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் இந்திய அணி 3-0 என்ற என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி வெற்றியுடன் தொடரை தொடங்கி உள்ளது. இந்திய அணியில் வந்தனா கட்டாரியா 2 கோலும் (17-வது, 60-வது நிமிடம்), லால்ரெம்சியாமி ஒரு கோலும் அடித்தனர்.
____________

மலேசியா ஓபன்: ஸ்ரீகாந்த் தோல்வி

மலேசியா ஓபன் பேட்மிண்டனில் இந்தியாவின் முன்னணி வீரரான ஸ்ரீகாந்த் கிதாம்பி காலிறுதியில் ஒலிம்பியன் சாம்பியனான சீனாவின் சென் லாங்கை எதிர்கொண்டார். இதில் ஸ்ரீகாந்த் 18-21, 19-21 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தார். ஸ்ரீகாந்த் முதல் சுற்றில் 16-11 என முன்னணியில் இருந்தார். அதன்பின் சீன வீரர் சென் லாங் 2 புள்ளிகள் மட்டுமே விட்டுக்கொடுத்து 10 புள்ளிகள் பெற்று 21-18 எனக் கைப்பற்றினார்.

2-வது செட்டில் ஸ்ரீகாந்த் 7-11 என பின்தங்கியிருந்தார். அதன்பின் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 19-19 என சமநிலைப் பெற்றார். ஆனால் வெற்றிக்கான இரண்டு புள்ளிகளை சென் லாங் பெற்று 21-19 எனக் கைப்பற்றி வெற்றி பெற்றார்.
_____________

ஆப்கான் டி20 அணிக்கு ரஷித் கேப்டன்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் டெஸ்ட், ஒரு நாள் போட்டி, டி20 அணிகளுக்கு கேப்டனாக அஸ்கார் ஆப்கான் நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரை நீக்கிவிட்டு மூன்று அணிக்கும் மூன்று கேப்டன்களை ஆப்கான் கிரிக்கெட் வாரியம் நேற்று நியமித்துள்ளது.

அதன்படி குல்பாடின் நைப், ஒரு நாள் போட்டிக்கான கேப்டனாகவும் துணை கேப்டனாக ரஷித் கானும் டெஸ்ட் அணி கேப்டனாக ரமத் ஷாவும் துணை கேப்டனாக ஹஸ்மத் ஷாகிதியும் சுழல்பந்துவீச்சாளர் ரஷித் கான் டி20 கேப்டனாகவும் துணைக்கேப்டனாக ஷபிக்குல்லா ஷபக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
____________

ஆண்டர்சனுக்கு அஸ்வின் பதிலடி

ஐ.பி.எல் தொடரின் 12-வது சீசன் மார்ச் மாதம் 23-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மார்ச் 25-ம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெற்ற போடியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லரை மான்கட் முறையில் பஞ்சாப் அணியின் அஸ்வின் அவுட்டாக்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் அஸ்வின் ஃபோட்டோவை கிழித்து தனது எதிர்ப்பை தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதற்கு அஸ்வின், ‘ நான் செய்தது தவறு என்று ஜேம்ஸ் ஆண்டர்சன் இன்று நினைக்கலாம். ஆனால் நாளை அவரே கூட மான்கட் முறையில் விக்கெட்டை எடுக்க நேரிடும். கிரிக்கெட்டில் மான்கட் முறை இருக்கிறது. அதனால் அது பற்றி பேச வேண்டிய அவசியமில்லை’ என்று பதிலளித்துள்ளார். மேலும் என்னைப் பற்றி தெரிந்தவர்களுக்கு நான் சட்டவிரோதமாக எதையும் செய்யமாட்டேன் என்று தெரியும். இந்த சர்ச்சைக்குப் பிறகும் என்னுடைய அணியினர் எனக்கு துணை நிற்கின்றனர். பல வீரர்கள என்னிடம் வந்து நான் செய்ததில் எந்தத் தவறும் இல்லை என்று சொல்கின்றனர். மான்கட் முறையில் நான் விக்கெட்டை எடுத்தது குறித்த சர்ச்சை பேச்சுகள் என்னை பாதிக்கவில்லை என்று அஸ்வின் கூறியுள்ளார்.
____________

அணி தேர்வு குறித்து ரோஹித் விளக்கம்

கிரிக்கெட்.காம் என்ற இணையதள அறிமுக நிகழ்ச்சியில் நடந்த குழு விவாதத்தில் கெவின் பீட்டர்சன், பிரையன் லாரா, ரோஹித் சர்மா, மகேலா ஜெயவர்தனே, மகளிர் கிரிக்கெட்டின் ஸ்மிருதி மந்தனா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் ரோஹித் சர்மா பேசும்போது, “உலகக்கோப்பை அணித்தேர்வுக்கு ஐபிஎல் போட்டிகள் அளவு கோலாக இருக்கக் கூடாது.  கடந்த 4 ஆண்டுகளில் நிறைய சர்வதேச போட்டிகள் ஆடியுள்ளோம் அதுதான் நாங்கள் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதற்கான ஆதாரம். 50 ஒவர் கிரிக்கெட்டுக்கான அணியை 20 ஓவர் கிரிக்கெட் தொடரை வைத்துத் தேர்வு செய்ய முடியாது. உலகக்கோப்பைக்கு நம் அணி ஏறக்குறைய செட்டில் ஆகிவிட்டது. ஒரு சில இடங்கள் மட்டுமே நிரப்பப்பட வேண்டும்.  கேப்டன், கோச், தேர்வாளர்கள் இதனை முடிவு செய்வார்கள்” என்றார் ரோஹித் சர்மா.
____________

நியூசி., முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு மிரட்டல்

இதுவரை விளையாடிய நான்கு  ஆட்டங்களிலும் ஆா்.சி.பி. தோல்வியடைந்துள்ளது ஆர்சிபி அணி. இதனால் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்நிலையில் ஆர்சிபி ரசிகர் ஒருவர் தனக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக சைமன் டோல் ட்விட்டரில் கூறியுள்ளார். இதற்கு ஆதாரமாக அவர் ஸ்கீரின்ஷாட் ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில், ஆர்சிபி அணியை மேலும் விமரிசித்தால் நீங்கள் கொல்லப்படுவது உறுதி என்று ஒரு ரசிகர் சைமன் டோலுக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

நான் என்ன சொன்னேன் என்பது நினைவில்லை. ஆனால் அதற்காகக் கொலை மிரட்டலா? இது ஒரு கிரிக்கெட் ஆட்டம் மட்டும்தான், இயல்பாக இருங்கள் என்று ரசிகருக்கு ட்விட்டரில் பதில் அளித்துள்ளார் டோல்.  சைமன் டோல் நியூஸிலாந்து அணிக்காக 32 டெஸ்டுகளிலும் 42 ஒருநாள் ஆட்டங்களிலும் விளையாடியுள்ளார்.
____________

மிதாலிக்கு பந்துவீசிய கிளார்க்

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி முன்னணி அணிகளில் ஒன்றாக இருந்து வருகிறது. ஒரு நாள் அணியின் கேப்டனாக ‘லேடி சச்சின்’ என கிரிக்கெட் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் மிதாலி ராஜ் இருக்கிறார். மிதாலி ராஜ், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். தற்போது, மகளிர் கிரிக்கெட் அணி 50 ஓவர்கள் உலகக்கோப்பையை எதிர்நோக்கி உள்ளது. இங்கிலாந்தில் வரும் 30-ம் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது.

இதற்காக இந்திய அணி வீராங்கனைகள் தீவிர பயிற்சி செய்து வருகின்றனர். அதேபோல், மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜூம் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, உள்ளரங்க மைதானத்தில் பயிற்சி செய்த மிதாலிக்கு, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் பந்துவீசியுள்ளார். இந்த வீடியோ ட்விட்டரில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவுக்கு பதிலளித்த கிளார்க், “மகளிர் கிரிக்கெட்டின் சூப்பர்ஸ்டார், என்ன ஒரு வீராங்கனை, என்ன ஒரு மனிதர்” என மிதாலியை புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.
_____________

துப்பாக்கி முனையில் கால்பந்து வீரர் கடத்தல்

இத்தாலியில் கால்பந்து வீரர் ஒருவரின் கடைசி போட்டி மறக்க முடியாத தருணமாக அமைந்துவிட்டது. உள்ளூர் கால்பந்து போட்டிகளில் மிகவும் பிரபலமான வீரர் இக்னேஸியோ பார்பகால்லோ (55). இவர் தனது கடைசி போட்டியை சொந்த மைதானத்தில் விளையாடத் தொடங்கினார்.சிறிது நேரத்தில் ஹெலிகாப்டர் ஒன்று புழுதியைக் கிளம்பிக்கொண்டு நடு மைதானத்தில் தரையிறங்கியது. அதில் இருந்து வெளியே வந்த மர்ம நபர்கள், துப்பாக்கி முனையில் இக்னேஸியோவை கடத்திச் சென்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
பின்னர்தான் தெரிந்தது இது சும்மா ஜாலிக்காக எடுக்கப்பட்ட பிராங் வீடியோ. இதனை அறிந்த போட்டி நிர்வாகம், அவரது அணியை இடைநீக்கம் செய்ததோடு, அபராதமும் விதித்தது. உண்மையிலேயே அந்த போட்டி மறக்க முடியாத தருணமாக மாறிவிட்டது.
____________

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து