முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விளாசித் தள்ளினார் ரஸல்: 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தி கொல்கத்தா அணி அபார வெற்றி

சனிக்கிழமை, 6 ஏப்ரல் 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

பெங்களூரு : பெங்களூரு அணிக்கு எதிராக நேற்று முன்தினம் நடந்த போட்டியில் கொல்கத்தா அணி, ரஸலின் அதிரடியால் 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சிறப்பான தொடக்கம்...

ஐபிஎல் தொடரின் 17 வது லீக் போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நேற்று முன்தினம் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பந்துவீச தீர்மானித்தார்.  அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணியில் பார்த்திவ் படேலும், விராத் கோலியும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.

பார்த்திவ் 25 ரன்...

பெங்களூர் அணி இதுவரை விளையாடியுள்ள 4 போட்டிகளிலும் தோல்வியை தழுவியதால், முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் விளை யாடியது. இருவரும் 5.1 ஓவரிலேயே 50 ரன்கள் கொண்டு வந்தனர். நிதானமாக விளையாடி வந்த பார்த்திவ் 25 ரன்னில் ஆட்டமிழந்தார். 64 ரன்னில் பெங்களூர் அணி தனது முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. பிறகு விராத் கோலியுடன், டிவில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தார். இருவரும் சேர்ந்து சிக்ஸர்களாக பறக்கவிட்டனர். அதனால், பெங்களூர் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

டிவில்லியர்ஸ் அதிரடி...

சதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட விராத் கோலி 49 பந்தில் 2 சிக்ஸர் 9 பவுண்டரி உட்பட 84 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து, டிவில்லியர்ஸ் 32 பந்தில் 4 சிக்ஸர், 5 பவுண்டரி உட்பட 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது, பெங்களூர் அணி 18.5 ஓவரில் 185 ரன் எடுத்திருந்தது.

கடைசி நேரத்தில் ஸ்டோய்னிஸ் 13 பந்தில் 28 ரன்கள் எடுக்க, பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது. இதன் மூலம் 16வது முறையாக 200 ரன்களை கடந்து சென்னை அணியின் சாதனையை பெங்களூர் சமன் செய்தது.

தடுமாற்றம்...

பின்னர் களமிறங்கிய கொல்கத்தா அணியில் கிறிஸ் லின் 31 பந்தில் 43 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். உத்தப்பாவும் நிதிஷ் ராணாவும் நிதானமாக ஆடி முறையே 33, 37 ரன் எடுத்தனர். பின்னர் வந்த தினேஷ் கார்த்திக் 19 ரன்னில் வெறியே தடுமாறத் தொடங்கியது கொல்கத்தா. அப்போது ஆபத்பாந்தவனாக வந்த ஆண்ட்ரு ரஸல் அதிரடியாக ஆடி சிக்ஸர் மழை பொழிந்தார்.

அபார வெற்றி...

18 வது ஓவரில் ஹாட்ரிக் சிக்சர் விளாசிய அவர், 19 வது ஓவரில் டிம் சவுதி வீசிய பந்தில் 4 சிக்சரும் ஒரு பவுண்டரியும் நொறுக்கினார். இதையடுத்து கொல்கத்தா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரஸல், 13 பந்தில் 7 சிக்ஸர், ஒரு பவுண்டரி உட்பட 48 ரன் விளாசினார். இதையடுத்து பெங்களூரு அணி ஐந்தாவது தோல்வியைச் சந்தித்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து