முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

“பாகுபலி” ஆன ரஸ்ஸல்

சனிக்கிழமை, 6 ஏப்ரல் 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் ஆன்ரே ரஸ்ஸலை பாகுபலியாக உருவகப்படுத்தி, அணியின் உரிமையாளரான ஷாரூக் கான் பாராட்டியுள்ளார். பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், 13 பந்துகளில் 7 சிக்சர்களை பறக்க விட்ட ஆன்ரே ரஸ்ஸல், 48 ரன்கள் அடித்து கொல்கத்தா அணியின் வெற்றிக்கு உதவினார்.

இதனால் உற்சாகம் அடைந்துள்ள அந்த அணியின் உரிமையாளர் ஷாரூக் கான், ரஸ்ஸலை பாகுபலியாக உருவகப்படுத்தி ட்விட்டர் பக்கத்தில் பதவிட்டுள்ளார். பாகுபலி உடையை ரஸ்ஸல் அணிந்திருப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ள அவர், அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும் மிகச்சிறப்பாக விளையாடியதாக பாராட்டியுள்ளார்.
____________

அதிக ரன்கள் - விராட் கோலி சாதனை

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஒட்டுமொத்தமாக அதிக ரன்கள் விளாசிய வீரர் எனும் சிறப்பை பெங்களூர் அணி கேப்டனான விராட் கோலி பெற்றுள்ளார். கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி 84 ரன்களைக் குவித்த அவர், 5086 ரன்கள் குவித்து முதலிடத்தில் இருந்துவந்த சென்னை அணி வீரர் சுரேஷ் ரெய்னாவின் சாதனையை தகர்த்தார்.

அந்த வகையில், தற்போது 5110 ரன்கள் குவித்து முதலிடம் பெற்றுள்ள கோலி, சராசரியாக ஒரு போட்டியில் 38 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். இதில் 4 சதங்கள் உள்பட 35 அரை சதங்களையும் அவர் விளாசியுள்ளார். ஐபிஎல்லில் இதுவரை 180 சிக்ஸர்களையும் 452 பவுண்டரிகளையும் அடித்துள்ள கோலியின் ஸ்ட்ரைக் ரேட்டானது, 130க்கும் அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, ஒட்டுமொத்த இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகள் வரலாற்றில் 8000 ரன்கள் குவித்த இரண்டாவது இந்திய வீரர் எனும் சாதனையையும் இந்த போட்டியில் கோலி பெற்றார். இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா, ஏற்கெனவே 8000 ரன்களை குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
____________

கொல்கத்தா V/S சென்னை சூப்பர் கிங்ஸ்: ட்விட்டரில் வலுக்கும் வார்த்தை போர்
கொல்கத்தா மற்றும் சிஎஸ்கே ஆகிய இரு அணிகள் இடையே ட்விட்டரில் வார்த்தை போர் நிலவி வருகிறது. ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இந்தத் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணியும் பெங்களுர் அணியும் மோதியது. இந்தப் போட்டியில் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. விராட் கோலி மற்றும் டிவில்லியர்ஸ் அதிரடி காட்ட பெங்களூர் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 206 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி தொடக்கத்திலிருந்தே அதிரடி காட்டி விளையாடியது. கிறிஸ் லின் (43), உத்தப்பா (33), நிதிஷ் ரானா (37) ரன்கள் விளாசினர். பின்னர் வந்த தினேஷ் கார்த்திக் 19 ரன்களில் வெளியேறினார். இதனால் கொல்கத்தா அணியின் வெற்றி வாய்ப்பு சற்று குறைந்திருந்தது.

எனினும் கொல்கத்தா அணியை தோல்வியிலிருந்த மீட்க ரஸல் அதிரடி காட்ட தொடங்கினார். குறிப்பாக அவர் 18வது ஓவரில் ஹாட்ரிக் சிக்சர்கள் விளாசினார். மேலும் சவுதி வீசிய 19வது ஓவரிலும் 4 சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்தார் ரஸல். இறுதியில் ரஸல் 13 பந்துகளில் 7 சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரி உட்பட 48 ரன்கள் விளாசி கொல்கத்தா அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார். இந்நிலையில் ரஸலின் அதிரடி ஆட்டம் தொடர்பாக சிஎஸ்கே அணியின் ட்விட்டர் பக்கத்தில், “ரஸல் ஒரு நைட்மேர்” எனப் பதிவிட்டது. இதற்குப் பதிலளிக்கும் விதமாக கொல்கத்தா அணியின் ட்விட்டர் பக்கத்தில், “இன்னும் மூணு நாள்ல மீட் பண்ணலாம்” எனத் தெரிவித்துள்ளனர்.
____________

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து