முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்.கின் எப்-16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஆதாரத்தை வெளியிட்டது இந்தியா

திங்கட்கிழமை, 8 ஏப்ரல் 2019      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தானின் எப்-16 ரக போர் விமானத்தை நமது விமானப்படை சுட்டு வீழ்த்தியதற்கு ஆதாரமான ரேடார் பதிவுகளை இந்தியா நேற்று வெளியிட்டது.

பாக். மறுப்பு...

பாகிஸ்தான் எல்லைப்பகுதியான பாலகோட்டில் இந்திய விமானப்படை பயங்கரவாத முகாம்களை அழித்த பின்னர் பிப்ரவரி 27-ம் தேதி இந்திய விமானப்படை மற்றும் பாகிஸ்தான் விமானப்படை இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது பாகிஸ்தானின் எப்-16 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்திய விமானப்படை தெரிவித்தது. அந்த விமானத்தில் பயன்படுத்தப்பட்ட அம்ரான் ஏவுகணையின் சிதைந்த பாகங்களையும் இந்தியா வெளியிட்டது. ஆனால், இதை பாகிஸ்தான் மறுத்தது.

இந்தியா குற்றச்சாட்டு...

நாங்கள் சுட்டு வீழ்த்தியது எப்-16 ரக போர் விமானம்தான் என்பதை உறுதியாக கூறிய இந்தியா, அமெரிக்காவிற்கும் ஆதாரங்களை அனுப்பி வைத்தது. எப்-16 ரக போர் விமானத்தை உள்நாட்டு பயங்கரவாதிகளுக்கு எதிராக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், மற்ற நாடுகள் மீதான தாக்குதலுக்கு பயன்படுத்தக்கூடாது என்ற ஒப்பந்தத்தின்படி அமெரிக்கா பாகிஸ்தானுக்கு வழங்கியது. ஆனால், பாகிஸ்தான் ஒப்பந்த விதிகளை மீறியது என இந்தியா தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

குறையவில்லை...

இதற்கிடையில், அமெரிக்காவில் இருந்து வெளியாகும் “ஃபாரின் பாலிசி” என்ற செய்தி இதழ், அமெரிக்காவின் பாதுகாப்பு அதிகாரிகள் சமீபத்தில் பாகிஸ்தானிடம் எத்தனை எப்-16 ரக விமானங்கள் உள்ளது? என்பதை எண்ணி பார்த்ததாகவும், இதில், அமெரிக்காவால் வழங்கப்பட்ட விமானங்களின் எண்ணிக்கையில் எதுவும் குறையவில்லை என செய்தி வெளியிட்டது. இதற்கு இந்திய விமானப்படை மறுப்பு தெரிவித்திருந்தது. “இருதரப்பு வான்மோதலின்போது இந்திய விமானப்படையின் மிக் 21 பைசன் ரக விமானம், பாகிஸ்தானின் எப்-16 விமானத்தை நவ்ஷேரா செக்டாரில் சுட்டு வீழ்த்தியது,” என இந்திய விமானப்படை ஆணித்தரமாக கூறியுள்ளது.

வலுவான ஆதாரம்...

இந்நிலையில், இந்தியாவின் கருத்துக்கு வலு சேர்க்கும் புதிய ஆதாரத்தை இந்திய விமானப்படையின் துணை தளபதி ஆர்.ஜி.கே.கபூர் நேற்று வெளியிட்டார். பாகிஸ்தானின் எப்-16 ரக போர் விமானத்தை நமது விமானப்படை சுட்டு வீழ்த்திய ரேடார் பதிவுகளை செய்தியாளர்களுக்கு துணை தளபதி ஆர்.ஜி.கே.கபூர் காட்சிப்படுத்தினார். இதைவிட அதிக வலுவான ஆதாரம் எங்களிடம் உள்ளது. ஆனால், பாதுகாப்பு மற்றும் நாட்டின் அதிமுக்கிய ரகசியம் என்னும் வகையில் அந்த ஆதாரத்தை பொதுவெளியில் (ஊடகங்களுக்கு) பகிரங்கமாக தெரிவிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து