முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிரிமினல் அவதூறு வழக்கு: ராகுல் நேரில் ஆஜராக உத்தரவு

திங்கட்கிழமை, 8 ஏப்ரல் 2019      இந்தியா
Image Unavailable

காந்திநகர் : பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது அமித் ஷா இயக்குனராக பதவி வகிக்கும் கூட்டுறவு வங்கி 750 கோடி ரூபாயை மாற்றியதாக பேசிய ராகுல் காந்தியை நேரில் ஆஜராகுமாறு குஜராத் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

கிரிமினல் வழக்கு...

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2016-ம் ஆண்டில் கொண்டுவந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது பாஜக தலைவர் அமித் ஷா இயக்குனராக பதவி வகிக்கும் அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கி முறைகேடாக சுமார் 750 கோடி ரூபாயை மாற்றியதாக ராகுல் காந்தி முன்னர் குறிப்பிட்டிருந்தார்.  இவ்விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா ஆகியோர் மீது கிரிமினல் சட்டப்பிரிவின்கீழ் அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியின் சார்பிலும் அதன் தலைவர் சார்பிலும் கடந்த ஆண்டு அகமதாபாத் நகர கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மனுதாரர்களின் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

வரும் 27-ம் தேதி...

எனவே, இந்த வழக்கு தொடர்பாக மே 27-ம் தேதி நடைபெறும் விசாரணையில் நேரில் ஆஜராகுமாறு ராகுல் காந்தி மற்றும் ரந்தீப் சுர்ஜேவாலா ஆகியோருக்கு அகமதாபாத் நகர கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் எஸ்.கே. காத்வி நேற்று சம்மன் அனுப்பினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து