ஸ்ரீ.கிருஷ்ண பகவானை கொச்சப்படுத்தி பேசிய கி.வீரமணிக்கு வேதாந்தம் ஜி கண்டனம்.

திங்கட்கிழமை, 8 ஏப்ரல் 2019      ராமநாதபுரம்
8 rmd news

    ராமேசுவரம்,-  கிராம கோவில் பூஜாரிகள்,பூக்கட்டுவோர் பேரவை,அருள்வாக்கு சொல்பவர்கள் பேரவை,வி.ஹெச்.பி ஆகியோர்களின்  ஆதரவு மோடிக்குத்தான் எனவும், ஸ்ரீ.கிருஷ்ண பகவானையும் பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் நிகழ்வையும்  சம்பந்தப்படுத்தி மற்றும் கொச்சப்படுத்திய வீரமணியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிப்பதாக  ராமேசுவரம் திருக்கோவிலுக்கு வருகை தந்த  தமிழக வி.ஹெச்.பி யின் நிறுவனத்தலைவர் வேதாந்தம் ஜி நேற்று தெரிவித்தார்.
.
   செய்தியாளர் சந்திப்பில் மேலும் தெரிவித்தது:

மோடி கடந்த 5 ஆண்டு ஆட்சியில் இந்துக்களுக்கு என தனி சட்டம் திருத்தம்,வளர்ச்சித்திட்டம் நலத்திட்டம் ஏதும் அறிவிக்கப்படவில்லை,மேலும் சாதகமாக ஏதும் அறிவிக்கப்படவில்லை.இந்தியாவில் வாழும் அனைவரையும் ஜாதி,மதம்,இனம் என பிரித்து பார்க்காமல் தன் மக்களே என கருதியவர் மோடி.இந்த நிலையில் இஸ்லாமியரும்,கிறிஸ்துவ மக்களும் பா.ஜ.கட்சி மதவாத கட்சி என எதிர்ப்பு தெரிவித்து வருவது வருத்தத்தை அளிக்கிறது.நடைபெற்ற 5 ஆண்டு காலத்தில் இந்தியாவில் ஜாதி மற்றும்,மதக் கலவரம் மற்றும் குண்டு வெடிப்பு  போன்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறவில்லை. சமிபத்தில் புல்வான பகுதியில் இஸ்லாமியர் நடத்திய குண்டு வெடிப்புதான் நடைபெற்றது இதில் இஸ்லாமியரும்,கிறிஸ்துவ மக்கள் யாருக்கும் உயிரிழப்புகள் கிடையாது.இந்து மதத்தை சேர்ந்தவர்கள்தான் உயிரிழந்துள்ளனர்.முத்தலாக் சட்டதிட்டம் கூட உச்சநீதிமன்றத்தில் இஸ்லாமிய பெண் தொடங்கிய வழக்கின் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பை வைத்துதான் பாராளுமன்றத்தில் மோடி  முத்தலாக் நிறைவேற்றியுள்ளார்.இந்தியாவில் கிறிஸ்தவ அமைப்புகள் நடத்தி வந்த அனாதை இல்லம்,முதியோர் இல்லம்,மனக்குறைவுடையோர் இல்லம்,மாற்றுத்திறனாளி இல்லம் ஆகியவற்றிற்கு கணக்கில் வரப்படாத  வெளிநாட்டிலிருந்து அனுப்பபடும் ஹவால பணத்தை நிறுத்தியதால் தான் மோடி அரசை கிறிஸ்வ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து சர்ச் பிஷப்புகள் வெளிப்படையாக மோடிக்கு ஆதரவு அளிக்காதிர்கள் என வாசகங்கள் அடங்கிய அச்சு பிரிச்சுரம் வழங்கி விளம்பர படுத்தி வருகின்றனர். ரூ,500.ரூ.1000 ரூபாய் நோட்டுகள் மாற்றம் செய்த திட்டத்தால் தீவிரவாதிகளுக்கு வழங்கப்பட்ட பணம் திறுத்தப்பட்டது.இதனால் இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. நாட்டின் வளர்ச்சிக்காக ஜி.எஸ்.டி திட்டத்தால் 36 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளது.ஜனநாயக நாட்டில் எங்கும் வேண்டுமானலும் சென்று வாக்கு சேகரிக்கலாம்.ஆனால் தமிழகத்தில் தற்போது இஸ்லாமிய மக்கள் பா.ஜ.கட்சி வேட்பாளர்களை சுதந்திரமாக வாக்கு சேகரிக்க விடுவதில்லை.இந்த செயல் கண்டிக்கதக்கது. கி.வீரமணி ஸ்ரீ கிருஷ்ண பகவானின் 9 ஆவது அவதாரத்தையும்  சில நாட்களுக்கு முன்பு  நடைபெற்ற பொள்ளாச்சி நடைபெற்ற  விவகாரத்தையும் தொடர்பு படுத்தி பேசியது கண்டிக்கதக்கது.இதுபோல் ஏசுநாதரையும்,அல்லாவையும்,பைபிலையும்,குரான்களையும் இழிவுபடுத்தியும்,கொச்சப்படுத்தியும் பேசியிருந்ததால் இதுவரை தமிழக அரசு கைது நடவடிக்கை எடுக்காமல் இருந்து இருக்குமா.மதத்திற்கு தகுந்தபடி தமிழக அரசு நடவடிக்கை எடுப்பது கண்டிக்க தக்கது. காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுலும்,திமுக கட்சியின் தலைவருமான ஸ்டாலினும் அரசியலுக்காக  இந்து மதத்தை விமர்சித்து பேசுவதில் ஒன்றாக உள்ளனர்.இது அரசியல் நாகரிகமற்ற செய்லாகும். நாடாளுமன்ற தேர்தலில் தமிழக வி.ஹெச்,பி அமைப்பின் ஆதரவு பா.ஜ.கட்சிக்கு என தெரிவித்தார். ராமேசுவரம் கோசுவாமி  மடம் வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர்  சந்திப்பில்  தமிழக வி.ஹெச்.பி யின் நிர்வாக குழு உறுப்பினர் ராமசுப்பு உள்பட தொண்டர்கள் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து