முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் சந்திரபாபு நாயுடு: சூசகமாக சொல்கிறார் தேவகவுடா

செவ்வாய்க்கிழமை, 9 ஏப்ரல் 2019      இந்தியா
Image Unavailable

விஜயவாடா, எதிர்க்கட்சிகள் கூட்டணியின் பிரதமர் பதவி வேட்பாளராக தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தேர்வு செய்யப்பட வாய்ப்பிருப்பதாக மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் தேவகவுடா சூசகமாக தெரிவித்துள்ளார்.

ஆந்திராவில் தெலுங்கு தேசம் வேட்பாளர்களை ஆதரித்து மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான தேர்வகவுடா பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர், சந்திரபாபு நாயுடுவின் தலைமையை நாடு எதிர்நோக்கியுள்ளது. நாடு இக்கட்டான தருணத்தில் உள்ளது. ஆதலால் சந்திரபாபு நாயுடு இந்த சவாலை ஏற்க வேண்டும். நாட்டின் பிரதமராக சந்திரபாபு நாயுடு ஏன் பொறுப்பேற்கக் கூடாது? மோடியை எதிர்க்கும் சவாலை யார் ஏற்பார்கள் என விவாதம் நடத்தப்படுகிறது. இந்த சவாலை ஏற்கக் கூடிய ஒரே நபர், சந்திரபாபு நாயுடுதான். மோடியை எதிர்க்க அனைத்துக் கட்சிகளின் தலைவர்களையும் சந்திரபாபு நாயுடு ஒருங்கிணைக்க வேண்டும். தெலுங்குதேசம் கட்சி சட்டமன்ற தேர்தலில் 150 தொகுதிகளில் வெல்லும் எனவும், 20 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து