முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசியல் ஆதாயத்துக்காக மோடி மீது ஊழல் புகார் சொல்கிறார் - ராகுல் மீது கட்காரி தாக்கு

செவ்வாய்க்கிழமை, 9 ஏப்ரல் 2019      இந்தியா
Image Unavailable

நாக்பூர் : அரசியல் ஆதாயத்துக்காக மோடி மீது ராகுல் காந்தி ஊழல் புகார் சொல்வதாக நிதின் கட்காரி குற்றம் சாட்டினார்.     

மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான நிதின் கட்காரி ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

பிரதமர் மோடியை பற்றி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசும் விதம் நல்லதல்ல. அரசியல் ஆதாயத்துக்காக மோடிக்கு எதிராக அவர் ஊழல் புகார்களை சுமத்தி வருகிறார்.

பிரதமர், ஒரு கட்சிக்கு சொந்தமானவர் அல்ல. நாட்டுக்கே சொந்தமானவர். எனவே, பிரதமரை மதித்து அங்கீகரிக்க வேண்டிய கடமை, ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கிறது. ஆனால், துரதிருஷ்டவசமாக, மோடிக்கு எதிராக மோசமான வார்த்தைகளை ராகுல் பயன்படுத்தி வருகிறார். 

ஏழைகளுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கும் திட்டத்தை காங்கிரஸ் அறிவித்துள்ளது. இது, வெறும் கவர்ச்சி கோஷம். ஏழைகளிடம் ஓட்டு வாங்குவதற்கான அரசியல் வியூகம். இத்திட்டத்தை அமல்படுத்த ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் கோடி தேவைப்படும். இவ்வளவு பணம் எங்கிருந்து வரும்?

ஒருவேளை, இதற்காக இவ்வளவு பணத்தை பயன்படுத்தினாலும், விவசாயம் போன்ற இதர துறைகளுக்கான பணத்துக்கு என்ன செய்வது? அரசியல் ஆதாயத்துக்காக இதுபோன்ற கவர்ச்சி திட்டங்களை பின்பற்றுவது பொருளாதாரத்தை பாதிக்கும். காங்கிரசின் நம்பகத்தன்மையும் சரிந்து விடும்.

இப்போதைய தேவை, வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான நல்ல கொள்கைகளை வகுப்பதுதான். அதுபோல், வளர்ச்சி விகிதத்தையும், தனிநபர் வருமானத்தையும் உயரச்செய்ய வேண்டும். ‘வறுமையை ஒழிப்போம்’ என்று 1947-ம் ஆண்டில் இருந்தே காங்கிரஸ் கட்சி கோஷம் எழுப்பி வருகிறது. பின்னர், 40 அம்ச திட்டம், 20 அம்ச திட்டம், 5 அம்ச திட்டம் என்று போட்டார்கள். ஆனால், எதுவும் பயன்படவில்லை.  

மோடிதான் எங்களின் அடுத்த பிரதமர். இவ்வாறு நிதின் கட்காரி கூறினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து