முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லல்லுவின் ஜாமீன் மனு சுப்ரீம் கோர்ட்டில் நிராகரிப்பு

புதன்கிழமை, 10 ஏப்ரல் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : லல்லு பிரசாத் யாதவின் ஜாமீன் மனுவை சுப்ரீம் கோர்ட் நேற்று தள்ளுபடி செய்துள்ளது.

மேல்முறையீடு

கால்நடைத் தீவன  ஊழல் வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு 14 ஆண்டுகள் சிறை தண்டனையை  ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லல்லு பிரசாத் யாதவ் அனுபவித்து வருகிறார். தன் மீதான வழக்குகளில் ஒரு வழக்கில் ஏற்கெனவே ஜாமீன் பெற்ற லல்லு, 3 வழக்குகளில் ஜாமீன் கோரி ஜார்க்கண்ட் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கோரினார். ஆனால் அவரது கோரிக்கையை ஜார்க்கண்ட் ஐகோர்ட் நிராகரித்தது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் லல்லு மேல்முறையீடு செய்தார்.

மனு நிராகரிப்பு

இந்த மேல்முறையீட்டு மனுவை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரித்தது. மனுதாரர் மற்றும் சி.பி.ஐ. தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள் நேற்று தீர்ப்பு வழங்கினர். அப்போது, லல்லுவின் ஜாமீன் விஷயத்தில் ஜார்க்கண்ட் ஐகோர்ட் உத்தரவில் தலையிட விரும்பவில்லை என்று கூறி லல்லுவின் ஜாமீன் மனுவை நிராகரித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து