முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் கைது

புதன்கிழமை, 10 ஏப்ரல் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்தது.

கோர்ட்டில் ஆஜர்

ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி அமைப்பின் தலைவரும், காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களில் ஒருவருமான யாசின் மாலிக்கை, பயங்கரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளுக்கு நிதியுதவி செய்யப்பட்டது தொடர்பான  வழக்கில் தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ கைது செய்தது. நேற்று முன்தினம் மாலை டெல்லி அழைத்து வரப்பட்ட யாசின் மாலிக், என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது,  யாசின் மாலிக்கை காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏக்கு அனுமதி கிடைத்தது.

குற்றச்சாட்டு

மக்கள் ஜனநாயக கட்சியின் நிறுவனரான மறைந்த முப்தி முகமது சயீதின் மகள் ருபய்யா சயீது கடந்த 1989-ஆம் ஆண்டில் கடத்தப்பட்டார். இதே போல் 1990-ஆம் ஆண்டில் இந்திய விமானப்படை வீரர்கள் 4 பேர் கொலை செய்யப்பட்டனர். இந்த 2 சம்பவங்கள் தொடர்பாகவும் யாசின் மாலிக் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தீர்ப்பு ஒத்திவைப்பு

இந்த வழக்குகள் குறித்து மீண்டும் விசாரணை நடத்த அனுமதி கோரி, ஜம்மு-காஷ்மீர் ஐகோர்ட்டில் சி.பி.ஐ. மனு தாக்கல் செய்துள்ளது. அதன் மீதான தீர்ப்பை ஜம்மு-காஷ்மீர் ஐகோர்ட் ஒத்திவைத்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி அமைப்புக்கு மத்திய அரசு அண்மையில் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து