முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரைத்திருவிழா அரசுப்பொருட்காட்சி 2019 துவங்கியது

புதன்கிழமை, 10 ஏப்ரல் 2019      மதுரை
Image Unavailable

    மதுரை,- அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரைத்திருவிழா கடந்த 08.04.2019 அன்று கொடியேற்றத்துடன் துவங்கிய திருநாளானது, 17.04.2019 அன்று திருக்கல்யாணம் உற்சவமும், 18.04.2019 அன்று திருத்தேரோட்டம் மற்றும் அருள்மிகு கள்ளழகர் எதிர்சேவை வைபவமும், 19.04.2019 அன்று அருள்மிகு கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் நிகழ்வும், 21.04.2019 அன்று தல்லாகுளத்தில் பூப்பல்லக்கு நிகழ்ச்சி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதால், இலட்சக்கணக்கான பக்தர்கள் இந்நிகழ்ச்சிகளை கண்டுகளிப்பதற்காக மதுரை மாநகருக்கு வருகை தருவதை முன்னிட்டு, தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் வழக்கம் போல் தமுக்கம் மைதானத்தில் பொழுது போக்கு அம்சத்துடன் கூடிய அரசுப்பொருட்காட்சி   துவங்கியது.
 இப்பொருட்காட்சி தொடர்ந்து 45 நாட்கள் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற உள்ளது.  பொது மக்களின் மனம் கவரும் வகையில் பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய அரசுப்பொருட்காட்சியில் பார்வையிடுவதற்காக 27 அரசுத் துறைகள் மற்றும் 10 அரசு சார்பு நிறுவனங்கள் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. 
 தமிழ்நாடு அரசுத்துறை மற்றும் அரசு சார்பு நிறுவனங்கள் சார்பாக அமைக்கப்பட்ட அரங்குகளை செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் முனைவர்.பொ.சங்கர், , மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ச.நடராஜன், , மதுரை மாநகராட்சி ஆணையாளர்  .விசாகன், , ஆகியோர் பார்வையிட்டனர்.
 இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்)  .மதுமதி  , தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர்  .பூபதி  , செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்  .ச.தங்கவேல்  , உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் (செய்தி)  ,சே.ரா.நவீன்பாண்டியன்  , (விளம்பரம்)  .வா.பெ.வினோத்   உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை  அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து